தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

மேற்குவங்கம்: மம்தா பானர்ஜியின் மருமகள் வீட்டில் இருந்து சடலமாக மீட்பு!

மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியின் தாய்வழியிலான ஒன்றுவிட்ட சகோதரரின் மகள் பிரிஷ்டி முகர்ஜி, இன்று அவரது வீட்டில் இருந்து தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பீர்பூம் மாவட்டம், ராம்பூர்ஹாட்டின் குசும்பா கிராமத்தில் உள்ள அவரது வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு அறையில் இருந்து 31 வயதான பிரிஷ்டி முகர்ஜி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே பிரிஷ்டி மன உளைச்சலில் இருந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பிரிஷ்டி முகர்ஜி தனது வேலையை இழந்திருந்தாகவும், மேலும், அவருக்கு விவாகரத்து வழக்கு நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து காவல்துறை உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராம்பூர்ஹாட் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

இது தற்கொலையாக இருக்கலாம் என்றும், எனினும் மரணத்திற்கான முழுமையான காரணம் விசாரணைக்கு பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel