Tamil News & polling
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டரை பலாத்காரம் கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைக்குக் காரணமானவர்களை விரைவாகத் தண்டிக்கக் கோரி மருத்துவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் இந்த கைது நிகழ்ந்துள்ளது. மருத்துவமனை வளாகத்தில் சிவிக் போலீஸ் எனப்படும் காவல்துறைக்கு உதவிகளைச் செய்யும் அங்கீகரிக்கப்பட்ட நபராக வேலை செய்துவந்தவன் இந்த சஞ்சய் ராய். கடந்த 8-ந் தேதி இரவு பணியில் ஈடுபட்டிருந்த பெண் மருத்துவரைக் பலாத்காரம் கொலை செய்துள்ளான்.
சம்பவத்தன்று அதிகாலையில் அவன் மருத்துவமனைக்குள் நுழைந்த காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்தது. இதன் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் சஞ்சய் ராயைப் பிடித்து விசாரித்த போது அவர் பெண் மருத்துவரைக் கொலை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.
முதல் கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில், பெண் டாக்டரின் கண்கள், வாய் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் இருந்து ரத்தம் கொட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இடது கால், வலது கை, மோதிர விரல் மற்றும் உதடுகளிலும் காயங்கள் இருந்ததாக கூறப் பட்டுள்ளது. இந்நிலையில் கைதான சஞ்சய் ராயிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கொலை செய்த பிறகு சஞ்சய் ராய் மீண்டும் தான் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று மறுநாள் காலை வெகுநேரம் வரை தூங்கி உள்ளான்.
பின்னர் எழுந்ததும் தடயங்களை அழிக்க முடிவு செய்து, கொலை செய்த போது தான் அணிந்திருந்த ஆடைகளைத் துவைத்ததாக போலீசார் தெரிவித்தனர். சஞ்சய் அணிந்திருந்த காலனிகளில் ரத்தகரைகள் படிந்திருந்ததை சோதனையின் போது கண்டு பிடித்ததாகவும் போலீசார் கூறினர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், இறுதி பிரேத பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம், சம்பவம் நடந்த அன்றைய இரவு பணியிலிருந்த அனைவரிடமும் விசாரணை நடத்தி சி.சி.டி.வி. காட்சிகளையும் சரிபார்த்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர். சஞ்சயின் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக BJP கனமழை தமிழக வெற்றிக் கழகம் Tamil Nadu எடப்பாடி பழனிசாமி MK Stalin TTV Dhinakaran AIADMK ADMK திருமாவளவன் மு.க.ஸ்டாலின் Anbumani Ramadoss AMMK அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு சீமான் டிடிவி தினகரன் Thirumavalavan PMK முக ஸ்டாலின் செங்கோட்டையன் Seeman Sengottaiyan பாமக வடகிழக்கு பருவமழை Congress Edappadi Palaniswami சட்டசபை தேர்தல் Tamilaga Vettri Kazhagam