INDIAN 7

Tamil News & polling

இயக்குனர் மோகன் ஜி கைதுக்கான காரணம் என்ன.?

24 செப்டம்பர் 2024 04:30 AM | views : 1479
Nature

திரௌபதி, பகாசுரன் உள்ளிட்ட தமிழ் படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜியை போலீசார் இன்று காலை கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


பிரபல தமிழ் பட இயக்குனர் மோகன் ஜி, இவர் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் மற்றும் பகாசுரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் இந்த திரைப்படங்களில் பெண் பெண்களுக்கு எதிரான கொடுமைகளையும், நாடகக் காதல்களையும் விமர்சித்து படத்தை இயக்கியுள்ளார். இவரது திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து நிலையில் தொடர்ந்து பாமக ஆதரவாளராகவே தன்னை காட்டிக் கொண்டு வந்தார். இந்த நிலையில் இயக்குனர் மோகன் ஜியை போலீசார் கைது செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் வெளியிட்டுள்ள பதிவில், சினிமா இயக்குனர் நண்பர் திரௌபதி மோகன் ஜி அவர்கள் சற்று முன் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன காரணம், எந்த வழக்கு என்று எந்த முறைப்படியான தகவலும் குடும்பத்தினருக்கு கூறப்படவில்லை. இது உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிரானது. அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் இல்லை. திமுகவினுடைய ஆட்சி அமைந்ததிலிருந்து எதிர்கருத்து பேசுபவர்கள் சட்டத்திற்கு புறம்பான முறையில் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. கஞ்சா கள்ளச்சாரயத்தை கட்டுப்படுத்த முடியாத திராவிட மாடலின் காவல்துறை இதுமாதிரியான ஒடுக்குமுறைகளை மட்டும் சரியாக செய்கிறது என தெரிவித்திருந்தார். இந்தநிலையில் இயக்குனர் மோகன்ஜியை வீடியோ பதிவு ஒன்றில் பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளை கலப்பதாக கூறியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கிற்காக கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது. இருந்த போதும் கைதுக்கான முழுமையான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

Like
4
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த காட்டுக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன் (43 வயது). இவரது மனைவி கலையரசி (33 வயது). இவர்களுக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்த தம்பதிக்கு 3 மகன்கள்

Image மதுரையை சேர்ந்தவர் தேவா என்ற ரித்தீஷ்(வயது 27). கூலித்தொழிலாளி. இவர், குடும்பத்துடன் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளத்தில் உள்ள அரசமரத்து விநாயகர் கோவில் வீதியில் வசித்து வந்தார். இவரது மனைவி இந்திராணி(26). இவர்களுக்கு

Image சென்னை, சென்னை வடபழனியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் நேற்று இரவு ஆங்கில புத்தாண்டை தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். பின்னர் மாணவி தனது வீட்டில் உள்ள மாடி படிக்கட்டில்

Image கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டரின் டிரைவராக தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாதவகண்ணன் (வயது 27) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் இன்ஸ்பெக்டரிடம் குடும்ப உறுப்பினர்போல் பழகி வந்ததாக கூறப்படுகிறது.



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்