Tamil News & polling
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி முதல் மாநாட்டை அறிவித்தார். தமிழக மக்கள், அரசியல் கட்சியினர் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறுகிறது.
வெற்றிக் கொள்கை திருவிழா என்று பெயர் குறிப்பிட்டு இந்த மாநாட்டு பணிகளை விஜய் கட்சியினர் முன்னெடுத்து கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தீவிரமாக பணி செய்து வந்தார்கள்.
85 ஏக்கர் பரப்பளவில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு செல்வதற்கு 5 நுழைவு வாயில்களும், வெளியே செல்வதற்கு 15 வழிப்பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
விஜய் கட்சி மாநாட்டுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் காரணமாக வி.சாலை பகுதி மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. எதிர்பார்ப்புடன் தொண்டர்கள் மாநாட்டிற்காக அதிகாலை முதலே குவிய தொடங்கி விட்டார்கள்.
இந்த நிலையில், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறியிருப்பதாவது:-
இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு!
மதுரை தேமுதிக முதல் மாநாடு 150 ஏக்கர் நிலப்பரப்பில் 2.5லட்சர் சேர் போடப்பட்டு நடத்தப்பட்டது!
உட்கார இடம் இல்லாமல் மாநாட்டு பந்தலுக்கு வெளியே லட்சோப லட்ச தொண்டர்கள் குவிந்தனர்!
மொத்தம் 25லட்சம் பேர் கலந்து கொண்டனர்!
உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது! என்று கூறியுள்ளார்.
இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு! மதுரை தேமுதிக முதல் மாநாடு 150 ஏக்கர் நிலப்பரப்பில் 2.5லட்சர் சேர் போடப்பட்டு நடத்தப்பட்டது!உட்கார இடம் இல்லாமல் மாநாட்டு பந்தலுக்கு வெளியே லட்சோப லட்ச தொண்டர்கள் குவிந்தனர்!மொத்தம் 25லட்சம் பேர் கலந்து கொண்டனர்! உலக சாதனை… pic.twitter.com/DLfRmzS8hO
— Premallatha Vijayakant (@PremallathaDmdk) October 26, 2024

விஜய் Vijay சென்னை Chennai DMK திமுக TVK அண்ணாமலை Annamalai தவெக பாஜக அதிமுக BJP கனமழை Tamil Nadu தமிழக வெற்றிக் கழகம் TTV Dhinakaran எடப்பாடி பழனிசாமி MK Stalin AIADMK திருமாவளவன் சீமான் மு.க.ஸ்டாலின் AMMK தமிழ்நாடு ADMK டிடிவி தினகரன் செங்கோட்டையன் Thirumavalavan Anbumani Ramadoss அன்புமணி ராமதாஸ் PMK Seeman Sengottaiyan முக ஸ்டாலின் வடகிழக்கு பருவமழை பாமக வானிலை ஆய்வு மையம் Tamilaga Vettri Kazhagam கைது Edappadi Palaniswami Congress