INDIAN 7

Tamil News & polling

ரஜினியை பின்னுக்குத் தள்ளிய சிவகார்த்திகேயன்!

01 நவம்பர் 2024 09:06 AM | views : 811
Nature

டிக்கெட் முன்பதிவில் நடிகர் ரஜினியை பின்னுக்குத் தள்ளியுள்ளார் சிவகார்த்திகேயன்.நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக நேற்று (அக். 31) திரையரங்குகளில் வெளியானது. மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

குறிப்பாக, படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன..

இந்த நிலையில், சினிமா டிக்கெட் முன்பதிவில் முன்னணியிலிருக்கும் புக் மை ஷோ (book my show) செயலி வாயிலாக அமரன் திரைப்படத்திற்கு முதல் நாளில் 4.78 லட்சம் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தாண்டில் இதுவரை வெளியான தமிழ்ப் படங்களிலேயே முதல் நாளில் அதிக முன்பதிவு சாதனையை செய்த படமாக நடிகர் விஜய்யின் கோட் (5.78 லட்சம் டிக்கெட்கள்) திரைப்படமே உள்ளது.

இரண்டாவதாக நடிகர் ரஜினிகாந்த்தின் வேட்டையன் (4.7 லட்சம்) இருந்தது.தற்போது, சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் மூலம் டிக்கெட் முன்பதிவில் ரஜினியை பின்னுக்குத் தள்ளியுள்ளார். இது ரசிகர்களிடையே பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது..

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்