INDIAN 7

Tamil News & polling

நடிகை கஸ்தூரிக்கு எதிராக மதுரை காவல் ஆணையரிடம் நாயுடு மகாஜன சங்கம் புகார்!

05 நவம்பர் 2024 04:20 PM | views : 865
Nature

மதுரை: நடிகை கஸ்தூரிக்கு எதிராக மதுரை மாநகர காவல் ஆணையரிடம் தமிழக நாயுடு மகாஜன சங்கத்தினர் புகார் அளித்தனர்.

தமிழக நாயுடு மகாஜன சங்கம் சார்பில், அதன் பொதுச் செயலாளர் ரமேஷ், மற்றும் போஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகார் ஒன்றில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் எந்த மொழி, இன பாகுபாடின்றி அனைவரும் சமமாக அமைதி, ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். கடந்த 3ம் தேதி நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் இனமான எங்களது நாயுடு குல சமுதாய பெண்களை இழிவுச்சொல் கூறியும், இன குலத்தோர், நாடாண்ட மன்னர்களையும் இழிவுப்படுத்து நோக்கிலும் பேசியுள்ளார். தமிழக மக்களிடம் பிரிவினை, இனப்பிரச்சினையை தூண்டிவிடும் உள்நோக்கத்தோடு சாதிய இழிச் சொற்களை பேசி, எங்களது சமுதாய மக்களை மிகுந்த வேதனைக்கு உட்படுத்தியுள்ளார்.






அவரது சுய விளம்பரத்திற்காக, சிலரின் பின்புலத்தில் செயல்பட்டுள்ளார். ஒற்றுமையுடன் வாழும் மக்களிடையே பிரிவினையை உண்டாக்கி, சட்டம், ஒழுங்கை சீர் கெடுக்கும் எண்ணத்துடன் பொது நிகழ்ச்சி ஒன்றில் அவச் சொற்களை அவர் பேசியுள்ளார். தமிழக மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் எண்ணத்தில் செயல்பட்ட நடிகை கஸ்தூரி மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்” என அதில் வலியுறுத்தியுள்ளனர். நிர்வாகிகள் கூறுகையில், “நடிகை கஸ்தூரியின் பேச்சு உலகம் முழுவதும் தெலுங்கு பேசும் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்காவிடின் நவ.,10ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்றனர்.


Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image திண்டுக்கல் மாவட்டம், வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.1,595 கோடியில் 111 முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து, 212 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,

Image மதுரையை சேர்ந்தவர் தேவா என்ற ரித்தீஷ்(வயது 27). கூலித்தொழிலாளி. இவர், குடும்பத்துடன் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளத்தில் உள்ள அரசமரத்து விநாயகர் கோவில் வீதியில் வசித்து வந்தார். இவரது மனைவி இந்திராணி(26). இவர்களுக்கு

Image சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் பொதுமக்கள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாட போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கிறிஸ்துமஸ் தினத்தன்று அதிகாலை முதல்

Image கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டரின் டிரைவராக தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாதவகண்ணன் (வயது 27) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் இன்ஸ்பெக்டரிடம் குடும்ப உறுப்பினர்போல் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

Image திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தீபம் ஏற்ற காவல் துறை, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இது



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்