சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சீர்காழி சட்டமன்ற தொகுதி நிர்வாக சீரமைப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தாமு.இனியவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மேலிட பொறுப்பாளரும், நாகை தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஷா நவாஸ் பங்கேற்று பேசினார் அப்போது அவர் கூறுகையில்:-
கட்சியை மறுசீரமைத்து அதை உயிரோட்டமாக உயிர்ப்போடு வைத்திருப்பதில் முனைப்போடு இருப்பவர் நமது வி.சி.க. தலைவர் திருமாவளவன். மறு சீரமைப்பு நடவடிக்கையால் தான் தலித் அல்லாதவர்கள் இக்கட்சியில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று வேளச்சேரி தீர்மானம் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது. பொதுமக்கள் வாக்களித்து இது பொது கட்சிதான் என அங்கீகரித்துள்ளனர்.
அதன் விளைவாக தான் இன்று 2 எம்.பி.க்கள், 4 எம்.எல்.ஏ.க்கள், கடலூரில் துணை மேயர் மற்றும் பல்வேறு நகராட்சி, ஊராட்சிகளில் உறுப்பினர்கள் என மிகப்பெரிய கட்சியாக வி.சி.க. வடிவம் பெற்றுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லாமல் ஒரு நாள் கூட அரசியல் விவாதங்கள் நடைபெறுவதில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த கூட்டணியில் தொடர போகிறதா? அந்த கூட்டணிக்கு போகபோகிறதா? என்று தான் அரசியல் வட்டாரங்கள் பேசி கொண்டுள்ளனர்.
வி.சி.க. தலைவர் திருமாவளவன் எடுக்கும் நிலைப்பாட்டை நாடே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாக அ.தி.மு.க. கூறுகிறது. திருமாவளவன் அரசியல் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். திருமாவளவன் எடுக்கும் நிலைப்பாடு தான் இன்று அரசியலயே தீர்மானிக்க போகிறது என்ற நிலைக்கு வி.சி.க. வளர்ந்துள்ளது. புதிதாக வரக்கூடிய கட்சிகளும் யாரை எதிர்பார்க்கிறார்களோ, இல்லையோ விடுதலை சிறுத்தைகள் கட்சியை எதிர்பார்க்கின்றனர்.
விக்கிரவாண்டியில் மிகப்பெரிய மாநாட்டை நடத்திய த.வெ.க. தலைவர் விஜய், கட்சி தூண்டிலை யாருக்கு போடுகிறார்கள் என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பால அறவாழி, பரசு முருகையன், மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவா, தங்க மணிமாறன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம் – அவன் யார்?
பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவர் யார்?
சிறகடித்து பரப்பவனை சமாதனத்துக்கு உதார்ணம் சொல்வர் அவன் யார்?
சென்னை, மும்மொழிக்கொள்கை விவகாரம் தமிழகத்தில் தற்போது பேசுபொருளாகி வருகிறது. இந்த நிலையில், சி.பி.எஸ்.இ. பள்ளியின் நிர்வாக குழு தலைவராக விசிக தலைவர் திருமாவளவன், செயல்பட்டு வருகிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். அரசுப் பள்ளியில் ஏழை எளிய மாணவர்களுக்கு மும்மொழிகள் வேண்டாம் என்று கூறுபவர்கள் அனைவருமே, மும்மொழிகள் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன், ஏதோ ஒரு
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!