Tamil News & POLLING

 

விழாக்கோலம் பூண்ட நாகை: வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

6 months ago 29 ஆகஸ்ட் 2025 01:58 PM 220 views
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது.

புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி நடந்து வருகிறது. விழாவில் பேராலய அதிபர், பங்கு தந்தைகள், உதவி பங்குதந்தைகள் அருட்சகோதரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

விழா நாட்களில் பேராலயத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

மறுநாள் 8-ந் தேதி புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் சகாயராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

உங்கள் கருத்து (Your Opinion)

இந்த செய்தியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK ANNAMALAI தவெக AIADMK ADMK AMMK MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் TAMIL NADU ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் சீமான் எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலின் தமிழகம் PMK முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் பாமக காங்கிரஸ் ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் கனமழை இந்திய அணி INDIAN CRICKET TEAM UDHAYANIDHI STALIN CONGRESS PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் கைது பிரதமர் மோடி NELLAI SEEMAN அமமுக EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH கொலை கோவை வடகிழக்கு பருவமழை TAMILAGA VETTRI KAZHAGAM COIMBATORE TAMIL ACTRESS OPS மதுரை தென்காசி கள்ளக்காதல் நெல்லை வன்னியர் தமிழ்நாடு திருநெல்வேலி சட்டசபை தேர்தல் நயினார் நாகேந்திரன் திருமாவளவன் AJITH திருப்பரங்குன்றம் ஓபிஎஸ் தீபாவளி விடுமுறை கீர்த்தி சுரேஷ் THIRUMAVALAVAN தேவர் MADURAI டிரெண்டிங் நாம் தமிழர் கட்சி THOOTHUKUDI கொரோனா நாடாளுமன்ற தேர்தல் TAMIL CINEMA NORTHEAST MONSOON ELECTION COMMISSION தமிழக அரசு டாப் நியூஸ் பாலியல் தொல்லை