INDIAN 7

Tamil News & polling

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா - எதிர்ப்பது யார்? ஆதரிப்பது யார்?

17 டிசம்பர் 2024 07:13 AM | views : 868
Nature

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலும், மாநில சட்டமன்றங்களின் தேர்தலும் தனித்தனியாக நடந்து வருகிறது. இதனால் அதிக செலவு ஏற்படுவதால் நாடாளுமன்ற மக்களவைக்​கும், மாநிலங்​கள் மற்றும் யூனியன் பிரதேசங்​களின் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்​தில் தேர்தல் நடத்தும் வகையில் ‘ஒரே நாடு, ஒரே தேர்​தல்’ திட்​டத்தை மத்திய அரசு கையில் எடுத்தது.

ஆனால் ‘ஒரே நாடு, ஒரே தேர்​தல்’ திட்டத்தால் மாநிலங்களின் உரிமைகள் அனைத்தும் பரிபோகி மன்னராட்சிக்கு வழிவக்கும் என்று காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் இந்த திட்டத்தின் சாத்​தி​யக்​கூறுகள் குறித்து ஆராய்வதற்காக முன்​னாள் குடியரசுத் தலைவர் ராம்​நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக்குழு அமைத்தது மத்திய அரசு. 
பின்பு இந்த குழு அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பிடம் கருத்துகள் கேட்டு சமர்ப்பித்த அறிக்கையில் நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2029ம் ஆண்டு முதல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்திக் கொள்ளலாம் என கூறியது. இதனைத் தொடர்ந்து ‘ஒரே நாடு, ஒரே தேர்​தல்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இது தொடர்பான மசோதாக்களை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்கிறார். இந்த மசோதாவை ஆதரிக்கும் கட்சிகள் மற்றும் எதிர்க்கும் கட்சிகள் குறித்து இப்போது பார்ப்போம். 




ஆதரிப்பது யார் யார்?

பா.ஜ.க, அதிமுக, பாமக, தமாகா, தேசிய மக்கள் கட்சி, அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம், அப்னா தால், ASOM கண பரிஷத், பிஜு ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி கட்சி, மிசோ தேசிய முன்னணி, தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி, சிரோமணி அகாலி தளம், ஐக்கிய மக்கள் கட்சி லிபரல், இந்திய குடியரசுக் கட்சி, ராஷ்ட்ரிய லோக் ஜனதா தளம், ஐக்கிய கிசான் விகாஸ் கட்சி, பாரதிய சமாஜ் கட்சி, கோர்கா தேசிய லிபரல் முன்னணி, இந்துஸ்தானி ஆவம் மோர்ச்சா, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி, ஜன் சுரஜய் சக்தி, ராஷ்ட்ரிய லோக் ஜன சக்தி கட்சி, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, நிஷாத் பார்ட்டி, புதிய நிதி கட்சி, ராஷ்டிரவாதி காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்), ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி, சிவசேனா,  சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா.


எதிர்ப்பது யார் யார்?

காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமாஜ்வாதி கட்சி, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, திரிணாமுல் காங்கிரஸ், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIமீம்), நாகா மக்கள் முன்னணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை, சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா.



 

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா - எதிர்ப்பது யார்? ஆதரிப்பது யார்?1

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image சென்னை, கடந்த சட்டசபை தேர்தலில் (2021) டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்த தே.மு.தி.க. 60 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், ஒன்றில் கூட வெற்றி

Image புதுடெல்லி, டெல்லியில் நேற்று முன்தினம் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடந்தது. அப்போது அதில் கலந்து கொண்ட கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங், பிரதமர் மோடியின் பழைய புகைப்படத்தைப்



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்