அம்மாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க முயன்ற ரிஷப்பந்த் - விபத்தில் சிக்கிய சோகம்

டிசம்பர் 30, 2022 | 09:47 am | views : 1933
புத்தாண்டையொட்டி டெல்லியில் இருந்த ரிஷப் பந்த், தனது தாயாருக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக வீட்டில் சொல்லாமலேயே அவரை சந்திக்க சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக அவர் சென்ற கார் விபத்தை சந்தித்து, ரிஷப் படுகாயம் அடைந்திருப்பதால் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். டெல்லியில் இருந்து புறப்பட்ட ரிஷப் உத்தராகண்டின் ரூர்க்கிக்கு சென்றுள்ளார். அவரது கார் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ரூர்க்கியின் நார்சன் எல்லையில் ஹம்மத்பூர் என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. வேகமாக வந்த கார், சாலையின் நடுப்பக்கம் வைக்கப்பட்டிருந்த டிவைடரில் மோதி பற்றி எரிந்துள்ளது. இதில் ரிஷப்பின் முதுகு, கை, கால் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், டெல்லியில் இருந்து கிளம்பிய ரிஷப், தனது தாயார் சரோஜ் பந்த்திற்கு, புத்தாண்டு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக வீட்டில் சொல்லாமலேயே சென்றுள்ளார். இதனால் விபத்து ஏற்பட்ட பின்னர்தான், ரிஷப் தங்களை பார்க்க வந்திருப்பது அவரது குடும்பத்தினருக்கு தெரிந்துள்ளது. விபத்தை தொடர்ந்து ரிஷப் பந்திற்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உயர் சிகிச்சைக்காக டேராடூன் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அபாய கட்டத்தில் இருந்து ரிஷப் மீண்டு விட்டதாக கூறியுள்ளனர்.
இதேபோன்று, ரிஷப் பந்த் உடல்நிலை முன்னேற்றத்தை பிசிசிஐ கண்காணித்து வருகிறது. இதுபற்றி அதன் செயலாளர் ஜெய் ஷா தனது ட்விட்டர் பதிவில், ‘கார் விபத்தில் காயமடைந்துள்ள ரிஷப் பந்த் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். விபத்து குறித்து அவரது குடும்பத்தினரிடமும், மருத்துர்களிடமும் பேசினேன். ரிஷப்பின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு ஸ்கேன்கள் எடுக்கப்பட்டுள்ளன. ரிஷப்பின் உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றங்களை நாங்கள் கவனித்து வருகிறோம். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்’ என்று கூறியுள்ளார்.
Also read... கட்டணமின்றி ஆவணங்களை மீண்டும் பெற சிறப்பு முகாம்கள் - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
விபத்தில் ரிஷப் பந்த் காயமடைந்து மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அவர் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் பிரார்த்தித்துள்ளனர்.
குறிப்பாக ரிஷப் காயங்களுடனும், மருத்துவனையில் சிகிச்சை மேற்கொண்டும் இருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரிஷபை இந்த மாதிரி பார்ப்பதற்கு வேதனையாக இருப்பதாக கூறியுள்ள கிரிக்கெட் பிரபலங்கள், சாம்பியன் ரிஷப் விரைவில் மீண்டு வருவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.
![]() |
![]() |
![]() |
![]() |
குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை - தமிழக அரசு அறிவிப்பு!
மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையில் சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன. இதில் இன்னும் சில பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. எனினும், பெரும்பாலான இடங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி அறிவித்துள்ளது.
கட்டணமின்றி ஆவணங்களை மீண்டும் பெற சிறப்பு முகாம்கள் - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த