வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேஷ் ஆனந்தை ஆதரித்து வேலூர் மண்டித்தெருவில் நாம் தமிழர் கட்சி தலைமை சீமான் பிரசாரம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான் கூறியதாவது:-
" எல்லா இடத்திலும்தான் காசு கொடுக்கப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தை ஒழுங்கமைக்க வேண்டுமானால் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் வேட்பாளர்களை 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை செய்ய வேண்டும். தேர்தலில் ஓட்டுக்கு காசு தரமாட்டோம் என்று சொன்னவர் தம்பி அண்ணாமலை. இப்போது அண்ணாமலைதான் ரூ4 கோடி பிடிபட்டது குறித்து பதில் சொல்ல வேண்டும்.
ஆகையால் பத்திரிகையாளர்கள் அண்ணாமலையிடம் இது குறித்து கேட்டு பதில் சொல்ல வேண்டும். நமது முன்னோர்கள் போராடிப் பெற்ற ஜனநாயகம் இப்போது எவ்வளவு கொடுமையான பணநாயகமாக மாறிவிட்டது. இதை ஒழித்து தூய ஜனநாயகத்தை மலரச் செய்ய வேண்டும். நாங்கள் காசு கொடுப்பவர்கள் இல்லை. அதனால் கூட்டணி அமைக்காமல் தனித்தே போட்டியிடுகிறோம்" என்றார்.
முன்னதாக நேற்று இரவு சென்னையில் இருந்து நெல்லை செல்லும் விரைவு ரெயிலில் பயணித்த 3 பேரை போலீசார் மடக்கி விசாரித்த போது ரூ4 கோடி சிக்கியது. இந்த 3 பேரும் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள். இதனால் நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும், பிடிபட்ட பணத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறி வருகிறார்.
உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?
பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?
பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?
பெரியார் சொன்னதாக சீமான் கூறியதற்கு ஆதரவாக தான் ஆதாரம் தருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது தந்தை பெரியார் குறித்து பல்வேறு விமர்சனங்களைக் காட்டமாக வைத்தார். பெரியார் சொன்னதாகப் பேசியதற்கு ஆதாரம் கோரி பெரியார் ஆதரவாளர்கள் சீமானுக்குக் கண்டனம் தெரிவித்தார்கள். தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர் இன்று
“உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ, மகளோ, அக்காவோ, தங்கையோ அவர்களுடன் உறவு வைத்துக் கொண்டு சந்தோஷமாக இரு என்று கூறியது பெண்ணிய உரிமையா?” என சீமான் பேசியது சர்ச்சையாகி உள்ளது. கடலூர்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடலூரில் இன்று (ஜன.08) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உனக்கு உடல் இச்சை
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சேலத்தில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள வரிகளெல்லாம் எங்கே. 10-க்கும் மேற்பட்ட வரிகளை நீங்கள் எடுத்துட்டீங்க. நான் மொத்தமா பாட்டையே எடுத்துட்டேன். அவ்வளவுதானே. திராவிடநல் திருநாடு இங்கே ஏன் வருகிறது? திராவிடம் என்ற சொல் என்ன மொழி? தமிழ்த்தாய் வாழ்த்தில் சமஸ்கிருத வார்த்தை
குரூப்-1, 2, 4 தேர்வு பாடத்திட்டங்களில் மாற்றம் இல்லை- டி.என்.பி.எஸ்.சி. தகவல்
உச்சகட்ட பரபரப்பில் திருப்பரங்குன்றம்!
வேங்கை வயல் மர்ம முடிச்சுக்கள் எவ்வாறு விலகியது... தலித் இளைஞர்கள் செய்த கேவலமான செயல் !
டங்ஸ்டன் சுரங்கம் ரத்து: மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது - டி.டி.வி. தினகரன்
அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் - ஓ.பன்னீர்செல்வம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!