மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன. இதில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் அங்கம் வகிக்கிறது. எனினும் பினராயி விஜயன் தலைமையிலான அக்கட்சி, காங்கிரசுக்கு எதிராக பேசுவதும், பினராயிக்கு எதிராக காங்கிரசார் பேசுவதும் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரசுக்கு எதிராக கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களை இறக்கி கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஓட்டுகள் பிரிந்து செல்லக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அது பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அமைய கூடிய வாய்ப்புகளும் காணப்படுகின்றன.
இதேபோல், இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்தபோதும், அவர்கள் தங்கள் மாநிலங்களில் தனித்தனியாகவே போட்டியிடுகின்றனர். தங்கள் கட்சிகளைச் சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக இறக்கி உள்ளனர். காங்கிரசுடன் தொகுதி உடன்பாடு ஏற்படாமல் கூட்டணிக்கான முக்கியத்துவம் அளிக்கப்படாமல் அக்கட்சிகள் தேர்தலை எதிர்கொண்டுள்ளன.
இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் முடிவு செய்யப்படாமல் உள்ளார். இது பிரசாரத்தில் கட்சிகள் தலைவரை முன்னிறுத்துவதற்கு முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற பல காரணங்களால், இந்தியா கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கண்ணூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:நாட்டில் பல தீவிர அரசியல் முன்னேற்ற விசயங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, ராகுல் காந்தி இந்தியாவில் இருப்பது இல்லை. அவர் ஒரு தீவிர அரசியல்வாதி இல்லை. இதுவே நாட்டிலுள்ள மக்களின் அனுபவம். இதுபற்றி நாம் விமர்சிப்பதில் இருந்து விலகியே இருக்கிறோம்.
ஏனெனில், அவர் வேறொரு கட்சியில் இருந்து வந்தவர். அது அவர்களுடைய உள்கட்சி விவகாரம். ஆனால், பொது தேர்தல் நடக்க கூடிய நேரமிது. இந்த தருணத்தில், அவர் கேரளாவுக்கு வந்து மத்திய விசாரணை அமைப்புகளுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்துள்ளது அவர் பக்குவமற்றவர் என காட்டுகிறது என கடுமையாக சாடியுள்ளார்.
தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல அது என்ன ?
2-வது டெஸ்ட்: ஆகாஷ் தீப் அபார பந்துவீச்சு... இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
Fact Check : அண்ணாமலை உடன் இருப்பது நிகிதா இல்லை... அவர் யார் தெரியுமா?
திருப்புவனம் அஜித் குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு
போதைப் பொருள் பயன்பாடு- நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவப் பரிசோதனை
போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!