POLLING FLAMES

 

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

2 years ago 25 ஏப்ரல் 2024 06:32 AM | views : 227
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நயினார் நாகேந்திரன் ஓட்டலில் வேலை பார்த்த சதீஷ், பெருமாள் உள்பட 3 பேரை கைது செய்து தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் 3 பேரும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.இந்த வழக்கில் நயினார் நாகேந்திரன், ஆசைதம்பி, சென்னை அபிராமிபுரத்தை சேர்ந்த பா.ஜனதா மாநில தொழில் துறை பிரிவின் தலைவர் கோவர்தனன், பா.ஜனதா கட்சியை சேர்ந்த ஜெய்சங்கர், நவீன், பெருமாள் உள்ளிட்டோர் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டது. வழக்கு விசாரணைக்கு 22-தேதி நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டி இருந்த நிலையில், 10 நாள் அவகாசம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் மற்றும் நயினார் நாகேந்திரனின் உறவினரான முருகன் ஆகியோர் தாம்பரம் போலீஸ் நிலையத்திற்கு வந்து போலீஸ் உதவி கமிஷனர் நெல்சன், இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் ஆகியோர் முன்னிலையில் ஆஜரானார்கள்.அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராக 2-வது சம்மன் அனுப்ப ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.இந்தநிலையில், ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் 2-வது முறையாக சம்மன் வழங்கினர். ஏற்கனவே அனுப்பிய சம்மனுக்கு ஆஜாராக நிலையில் 2-வது முறையாக நேரடியாக சம்மன் வழங்கப்பட்டது. சம்மன் குறித்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

ரெயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது என்னுடைய பணம் அல்ல என பலமுறை கூறிவிட்டேன். ரூ.4 கோடி பறிமுதலான விவகாரத்தில் மே 2-ம் தேதி தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராவேன்.என்னை முழுவதுமாக குறிவைத்துள்ளனர். அரசியல் சூழ்ச்சியாகவே இதைப்பார்க்கிறேன். போலீசார் தங்கள் கடமையை செய்கின்றனர். நான் முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என்றார். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் MK STALIN ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU TTV DHINAKARAN டிடிவி தினகரன் இந்திய அணி AIADMK UDHAYANIDHI STALIN காங்கிரஸ் ரஜினிகாந்த் PMK கனமழை தமிழக வெற்றிக் கழகம் பாமக அன்புமணி ராமதாஸ் CONGRESS தமிழகம் கோவை INDIAN CRICKET TEAM கொலை EDAPPADI PALANISWAMI COIMBATORE முக ஸ்டாலின் திருமாவளவன் தமிழ்நாடு வன்னியர் அமமுக KEERTHY SURESH பிரதமர் மோடி PARLIAMENT ELECTION AJITH கைது தேவர் OPS TAMILAGA VETTRI KAZHAGAM சீமான் ஓபிஎஸ் தமிழக சட்டசபை தேர்தல் சட்டசபை தேர்தல் நெல்லை BIGG BOSS TAMIL சூர்யா SURIYA TAMIL ACTRESS NELLAI கொரோனா THIRUMAVALAVAN வடகிழக்கு பருவமழை ELECTION COMMISSION தீபாவளி திருப்பரங்குன்றம் மதுரை அன்புமணி CSK தூத்துக்குடி கள்ளக்காதல் அஜித் நடிகை பாலியல் தொல்லை விடுமுறை தென்காசி கீர்த்தி சுரேஷ் RAJINIKANTH