கேரள மாநிலம் - தேடல் முடிவுகள்
11 டிசம்பர் 2024 07:56 AM
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கத்தில் தீண்டாமைக்கு எதிராக போராட்டம் நடந்தது. இதில் பெரியார் சமூகநீதி காக்க போராடி வெற்றி பெற்றார். அந்த வெற்றியை நினைவுகூரும் வகையில் வைக்கத்தில் பெரியார் நினைவகமும், பெரியார் நூலகமும் தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டு உள்ளது.
வைக்கம் போராட்டத்தில் பெரியார் பங்கேற்று நூற்றாண்டு நிறைவை கொண்டாடுவதற்காக தமிழக
03 டிசம்பர் 2024 12:59 AM
கேரள மாநிலம் ஆலப்புழாவில் காரும், அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 4 படுகாயம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
18 அக்டோபர் 2024 03:41 AM
புதுடெல்லி:
கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்ததையடுத்து, அந்த தொகுதிக்கு நவம்பர் 13-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுச்செயலாளர் பிரியங்கா களம் இறங்குகிறார்.
அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் நடிகை குஷ்பு களம் இறங்கவுள்ளதாக நேற்று இரவு பரபரப்பு
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்து உள்ளனர். வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் வகையில் பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிதியை, கேரள முதல்-மந்திரி பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கி இருக்கிறார்.
முன்னதாக,
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் நேற்று முன்தினம் அதிகாலையில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் ஏராளமான மக்கள் மண்ணில் உயிரோடு புதைந்தனர். சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
ராணுவம், விமானப்படை, கடற்படையினர், தேசிய பேரிடர் மீட்பு
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப் பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கி, நிவாரண பொருட்களும் அனுப்பி வைக்கப்படும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டு, தற்போது வரை கிட்டதட்ட 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முழுவதும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில், கனமழை காரணமாக நள்ளிரவில் நிறுத்தி வைக்கப்பட்டன.
வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலசரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லபட்டது. கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.
இன்னும் பலர்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடுமையான மழைப்பொழிவின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் விலைமதிக்க முடியாத உயிரிழப்புகளும், பொதுச்சொத்துக்களுக்கு சேதமும் ஏற்பட்டுள்ள நிலையில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
இந்த இயற்கை பேரிடரினால் ஏற்பட்டுள்ள
கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பரவி வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் 4 பேரும், மலப்புரம் மாவட்டத்தில் 6 பேரும் என மொத்தம் 10 பேர் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பின்னர் 9 பேர் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இருப்பினும், காய்ச்சல் குணமாகவில்லை. கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில்