Tamil News & POLLING

 

கேரளாவுக்கு ரூ.5 கோடி நிவாரணம்! - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

1 year ago 30 ஜூலை 2024 09:19 AM 135 views
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடுமையான மழைப்பொழிவின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் விலைமதிக்க முடியாத உயிரிழப்புகளும், பொதுச்சொத்துக்களுக்கு சேதமும் ஏற்பட்டுள்ள நிலையில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

இந்த இயற்கை பேரிடரினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு தனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்ட முதலமைச்சர் தமிழ்நாடு அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் கேரள அரசுக்குத் துணையாக பணியாற்றிட தமிழ்நாட்டிலிருந்து இரண்டு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான டாக்டர் கீ.சு. சமீரன், மற்றும் ஜானி டாம் வர்கீஸ், ஆகியோர் தலைமையில் மீட்புக் குழுவினரை உடனடியாக அனுப்பிட உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்கென கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 கோடி வழங்கிடவும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டிலிருந்து அனுப்பப்படவுள்ள மீட்புக் குழுவில் தீயணைப்புத் துறையிலிருந்து 20 தீயணைப்பு வீரர்கள் ஒரு இணை இயக்குநர் தலைமையிலும், 20 மாநிலப் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு வீரர்கள் ஒரு காவல் கண்காணிப்பாளர் தலைமையிலும், 10 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய ஒரு மருத்துவக் குழுவினரும் கேரள அரசுடன் மீட்பு மற்றும் மருத்துவச் சிகிச்சைப் பணிகளில் இணைந்து பணியாற்றுவார்கள். இந்தக் குழுவானது இன்றே கேரளாவிற்குப் புறப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உங்கள் கருத்து (Your Opinion)

இந்த செய்தியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AIADMK ADMK AMMK TAMIL NADU MK STALIN டிடிவி தினகரன் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் சீமான் எடப்பாடி பழனிசாமி தமிழகம் பாராளுமன்ற தேர்தல் உதயநிதி ஸ்டாலின் முக ஸ்டாலின் ANBUMANI RAMADOSS இந்திய அணி காங்கிரஸ் PMK தமிழக வெற்றிக் கழகம் INDIAN CRICKET TEAM கனமழை பிரதமர் மோடி ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN பாமக கைது PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் CONGRESS SEEMAN NELLAI EDAPPADI PALANISWAMI அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM கொலை வடகிழக்கு பருவமழை KEERTHY SURESH கோவை மதுரை THIRUMAVALAVAN திருநெல்வேலி தமிழ்நாடு நெல்லை COIMBATORE சட்டசபை தேர்தல் கள்ளக்காதல் திருமாவளவன் தென்காசி TAMIL ACTRESS OPS திருப்பரங்குன்றம் TAMIL CINEMA ஓபிஎஸ் தேவர் கீர்த்தி சுரேஷ் நயினார் நாகேந்திரன் தீபாவளி AJITH NORTHEAST MONSOON பாலியல் தொல்லை MADURAI நாம் தமிழர் கட்சி விடுமுறை டிரெண்டிங் டாப் நியூஸ் ELECTION COMMISSION தமிழக அரசு வன்னியர் THOOTHUKUDI