INDIAN 7

Tamil News & polling

பொதுக்குழு - தேடல் முடிவுகள்

ராமதாஸ் தலைமையில் நடந்தது பாமக பொதுக்குழு அல்ல - கே.பாலு பேட்டி சென்னை, பா.ம.க. செய்தி தொடர்பாளர் (அன்புமணி தரப்பு) வக்கீல் பாலு, சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, ஒரு அரசியல் கட்சியில் செயற்குழு, பொதுக்குழு எப்படி நடக்கும் என இலக்கணங்கள் இருக்கின்றன. பொதுக்குழுவில் சில முடிவுகள் எடுப்பதற்காக செயற்குழுவில் அது குறித்து விவாதிப்பார்கள். விவாதித்த

சேலத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இன்று பொதுக்குழு கூட்டம் சேலம், சேலத்தில் இன்று (திங்கட்கிழமை) டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. காலை 10 மணி முதல் 11.30 மணி வரை செயற்குழு கூட்டம் நடக்கிறது. அதன்பிறகு பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. செயற்குழு உறுப்பினர்கள் 650 பேர், பொதுக்குழு உறுப்பினர்கள் 4 ஆயிரத்து 300

சேலத்தில் 29-ந் தேதி நடைபெறுவது பாமக பொதுக்குழு கூட்டம் அல்ல: அன்புமணி தரப்பு விளக்கம் சென்னை, பாட்டாளி மக்கள் கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் வரும் 29-ம் தேதி சேலம் ஐந்து சாலை இரத்தினவேல் ஜெயக்குமார் திருமண அரங்கத்தில் நடைபெறும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அத்தகைய அறிவிப்பு எதையும்

விஜய்ய பாக்க ஆசையா? நாளைக்கு பாக்கலாம்! 2 ஆயிரம் பேருக்கு மட்டும் தான் அனுமதி 😮 த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு பொது நிகழ்வுகளில் விஜய் பங்கேற்காமல் இருந்தார். அந்த சம்பவத்தில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு வந்த விஜய், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து, ஆறுதல் கூறினார்.

மக்கள் சந்திப்பு கூட்டம்- விஜய் எடுத்த புதிய முடிவு த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு பொது நிகழ்வுகளில் விஜய் பங்கேற்காமல் இருந்தார். அந்த சம்பவத்தில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு வந்த விஜய், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து, ஆறுதல் கூறினார்.

விஜய் கட்சிக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம்  - தேர்தல் கமிஷனில் த.வெ.க. மனு சென்னை, 2026 தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில், மக்கள் சந்திப்பை முன்னெடுத்து வந்த த.வெ.க.வுக்கு கரூர் நிகழ்வு தீரா வலியை ஏற்படுத்தி விட்டது. அந்த சோக நிகழ்வில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக த.வெ.க. மீண்டு வருகிறது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்சி பணியாற்ற விஜய் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

நேற்றுதான் எனக்கு விடுதலை கிடைத்தது. இனி நாம் வேகமாக செல்லலாம்- அன்புமணி  பேச்சு பாமக நிறுவனர் ராமதாஸ்-க்கும், அவரது மகனும் அக்கட்சி தலைவருமான அன்புமணிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சோழிங்கநல்லூரில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு அன்புமணி பேசியதாவது:- சில குழப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் தற்காலிக குழப்பம்தான். எல்லாமே சரியாகிவிடும். சரிப்படுத்திடுவிடுவோம். சரிப்படுத்திவிடுவேன். பொருளாளர் திலகபாமாவுக்கு எதிராக ஒரு கடிதம் வந்தது.

அ.தி.மு.க. வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதி திடீர் விலகல் சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்குகள் 2022-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டன. அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான இந்த வழக்குகள் ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன.

பொதுக்குழு கையில் இருந்தும் எடப்பாடி ஜீரோதான் - புகழேந்தி 'யாரையும் கட்சியில் சேர்த்துக் கொள்ள முடியாது என எடப்பாடிக்கு சொல்ல தகுதி இல்லை' என புகழேந்தி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி பேசுகையில், ''யாரையும் கட்சியில் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் தான். நான் பலமுறை சொல்லி இருக்கிறேன்.

சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. கேவியட் மனு தாக்கல் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்காக அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அதன்பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு கூடி சசிகலா, தினகரன் ஆகியோரை அப்பதவிகளில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கியது. பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் தன்னை நீக்கியது செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா,



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்