Tamil News & POLLING

 

பொதுக்குழு கையில் இருந்தும் எடப்பாடி ஜீரோதான் - புகழேந்தி

1 year ago 23 செப்டம்பர் 2024 04:41 PM | views : 146
'யாரையும் கட்சியில் சேர்த்துக் கொள்ள முடியாது என எடப்பாடிக்கு சொல்ல தகுதி இல்லை' என புகழேந்தி தெரிவித்துள்ளார்.


சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி பேசுகையில், ''யாரையும் கட்சியில் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் தான். நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். நீதிமன்றத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் என எழுதிக் கொடுத்து வந்து விட்டீர்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் யாரையும் கட்சியில் சேர்த்துக் கொள்ள முடியாது என்று சொல்கிறீர்கள். அதைச் சொல்ல வேண்டியது சிவில் நீதிமன்றம். நீங்கள் திரும்பத் திரும்ப தவறு செய்கிறீர்கள். உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதில் முடிவு எடுக்க வேண்டியது சிவில் நீதிமன்றம் தான்.

ஒரே அக்கிரமம் அநியாயமாக இருக்கிறது. உச்சபட்சமாக மேலேபோய் நின்று கொண்டு யாரையும் சேர்த்துக் கொள்ள முடியாது, நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்று சொல்கிறீர்கள். நீங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறீர்கள்; பொதுக்குழு உங்களிடம் தான் இருக்கிறது; கட்சி உங்கள் கையில்தான் இருக்கிறது; சின்னம் கூட இருக்கிறது. எல்லாத்தையும் வைத்துக் கொள்ளுங்கள். எல்லாமே உங்களிடம் இருந்தும் என்ன ஆச்சு. பேரூராட்சியில் ஜீரோ. ஆனால் உங்களிடம் தான் பொதுக்குழு இருக்கிறது. நகராட்சியிலும் ஜீரோ. ஆனால் பொதுக்குழு உங்களிடம் தான் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக கம்ப்ளீட்டாக ஜீரோ. முதலில் தேனி வந்து கொண்டிருந்தது அதுவும் இப்பொழுது சேர்த்து ஜீரோ ஆகிவிட்டது. ஆனால் கட்சியும் பொதுக்குழுவும் உங்கள் கையில்தான் இருக்கிறது. எம்ஜிஆர் மருத்துவமனையில் இருந்து கொண்டே வெற்றிபெற்ற ஆண்டிப்பட்டி தொகுதியில் சில பூத்துகளில் ஒரு ஓட்டு, இரண்டு ஓட்டு பதிவாகி இருக்கிறது. இந்த கொடுமையை நீங்கள் எங்குமே பார்த்திருக்க முடியாது. ஆனால் பொதுக்குழு உங்கள் கையில் தான் இருக்கிறது. இப்பொழுது ஒரு பர்சன்டேஜ் ஓட்டு ஜாஸ்தியாக வாங்கிவிட்டேன் என்று சொல்கிறார். காது குத்துற வேலையெல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ளாதீர்கள் பழனிசாமி'' என்றார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK ANNAMALAI தவெக ADMK AIADMK AMMK MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU PMK காங்கிரஸ் சீமான் தமிழகம் மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் பாமக ரஜினிகாந்த் கனமழை இந்திய அணி PARLIAMENT ELECTION INDIAN CRICKET TEAM CONGRESS UDHAYANIDHI STALIN பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் கைது கொலை EDAPPADI PALANISWAMI அமமுக NELLAI சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை SEEMAN KEERTHY SURESH வன்னியர் தீபாவளி மதுரை TAMILAGA VETTRI KAZHAGAM OPS தமிழ்நாடு TAMIL ACTRESS கள்ளக்காதல் நெல்லை திருநெல்வேலி COIMBATORE தென்காசி கோவை AJITH கீர்த்தி சுரேஷ் THIRUMAVALAVAN NORTHEAST MONSOON MADURAI திருப்பரங்குன்றம் நயினார் நாகேந்திரன் டிரெண்டிங் டாப் நியூஸ் தேவர் TAMIL CINEMA திருமாவளவன் ஓபிஎஸ் ELECTION COMMISSION பாலியல் தொல்லை THOOTHUKUDI விடுமுறை நாம் தமிழர் கட்சி தமிழக அரசு நாடாளுமன்ற தேர்தல் ASSEMBLY ELECTIONS