27 வயதில் உயிரிழந்த பாலிவுட் நடிகை.. யார் இந்த அனன்யா ராஜ்?
பாலிவுட் திரையுலகில் இளம் பிரபலமாக வளம் வந்த நடிகை அனன்யா ராஜ் தனது 27 வயது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தீவிர உடல் மற்றும் மன நல் பிரச்னைகளால் அவதிப்பட்ட அவரின் உயிர் கடந்த ஜூலை 15 அன்று தூக்கத்திலேயே பிரிந்ததாக அவரின் குடும்பத்தினர் நேற்று அறிவித்துள்ளனர்.
அனன்யாவின் இன்ஸ்டாகிராம் கணக்கில் நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்ட அவரின் குடும்பத்தினர், தாங்கள் துக்கம் அனுசக்கரிக்கும் வேளையில் இதை அறிவிக்க வேண்டாம் என்று கருதியதால் அப்போதே இந்த செய்தியை வெளியிடவில்லை என தாமதமான அறிவிப்புக்கு விளக்கம் அளித்துள்ளனர்.
தீவிர உடல் மற்றும் மன நல பிரச்சனைகளால் கடந்த ஓராண்டாக அனன்யா கடுமையாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் என்ன பிரச்சனை என்பது குறித்த தகவல் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை.
1998 ஆகஸ்ட் 10 அன்று பிறந்த அனன்யா ராஜ் சென்குப்தா, டி சீரிஸ், டைம்ஸ் சீரிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தயாரிப்பில் உருவான இசை வீடியோக்கள் மூலம் கலைத்துறையில் அறிமுகமானவர். 2016 இல் '7 ஹவர்ஸ் டு கோ' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார் அனன்யா.
2017 இல் 'தி பைனல் எக்சிட்', 2019 இல் வெளியான 'கோஸ்ட்' படத்திலும் அவர் நடித்திருந்தார். தெலுங்கில் 2022 இல் வெளியான 'தகடே லே' படத்திலும் மூன்று மொழிகளில் ரிலீசான மெட்ராஸ் கேங் என்ற படத்திலும் அனன்யா நடித்திருந்தார்.
இதில் கோஸ்ட் படம் மூலம் அவர் அதிக கவனம் பெற்றிருந்தது குறிபிடத்தக்கது.
அவர் 'ஒரு வீராங்கனையை போல' தன் உடல் - மன பிரச்சனைகளை எதிர்கொண்டதாக அவரின் குடும்பம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவருக்கு கடந்த ஓராண்டு மிகவும் கடிமானதாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். அனன்யாவின் தாய், மஞ்சு குப்தா, இரண்டு இளைய சகோதரர்கள் ராகுல் மற்றும் ரோகித் ஆகியோர் இந்த இக்கட்டான காலகட்டத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனன்யா தன் குடுமபத்தினரால் 'பச்சா' என்று அன்போடு அழைக்கப்பட்டு வந்த செய்தியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனன்யாவின் மறைவுக்கு அகில இந்திய திரைப்பட ஊழியர்கள் சங்கம் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இளம் வயதில் ஒரு திறமையாளரை திரைத்துறை இழந்துள்ளதாகவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.