POLLING FLAMES

 

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அடுத்த மாதம் தமிழகம் வருகிறார்கள்.

4 months ago 11 டிசம்பர் 2025 08:29 AM | views : 321
சென்னை,

2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தன்னை தீவிரமாக தயார்படுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் கட்சியை வலுப்படுத்தும் வகையில் கிராம கமிட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை தமிழக தேர்தல் பிரசாரத்திற்கு அழைப்பதற்கான முன்னெடுப்புகளை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டுள்ளது.

அதன்படி, வருகிற ஜனவரி மாதம் ராகுல்காந்தி பங்கேற்கும் கிராம கமிட்டி மாநில மாநாடு, பிரியங்கா காந்தி பங்கேற்கும் மகளிர் பேரணியும் நடைபெற உள்ளது. இதற்காக அவர்கள் அடுத்த மாதம் தமிழகம் வர உள்ளனர். இந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முழுவதும் பங்கேற்கும் கிராம கமிட்டி மாநில மாநாட்டை ஒருங்கிணைக்க கீழ்கண்ட குழுக்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

அதன்படி, நிதிக்குழுவுக்கு கே.வி.தங்கபாலு, வாகன வசதி ஏற்பாட்டுக்குழுவுக்கு திருநாவுக்கரசர், வரவேற்புக்குழுவுக்கு கிருஷ்ணசாமி, விளம்பரக்குழுவுக்கு கே.எஸ்.அழகிரி, பிரசாரம் மற்றும் அணி திரட்டல் குழுவுக்கு பீட்டர் அல்போன்ஸ், மாநாட்டு திடல் அமைப்பு, தங்குமிடம் மற்றும் உபசரிப்புக்குழுவுக்கு ரூபி மனோகரன் தலைவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொள்ளும் மகளிர் பேரணியை சிறப்பாக நடத்த கீழ்கண்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கப்படுகிறது. ஜோதிமணி எம்.பி. தலைவராகவும், சுதா ராமகிருஷ்ணன் எம்.பி., முன்னாள் எம்.பி. கே.ராணி, மகிளா காங்கிரஸ் மாநில தலைவி ஹசீனா சையத், தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ராணி வெங்கடேசன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK எடப்பாடி பழனிசாமி MK STALIN தவெக டிடிவி தினகரன் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU AIADMK ANBUMANI RAMADOSS PMK ரஜினிகாந்த் காங்கிரஸ் பாமக முக ஸ்டாலின் கனமழை தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN PARLIAMENT ELECTION CONGRESS தமிழகம் கோவை இந்திய அணி கொலை COIMBATORE EDAPPADI PALANISWAMI திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் சீமான் பிரதமர் மோடி KEERTHY SURESH தமிழ்நாடு TAMILAGA VETTRI KAZHAGAM அமமுக கைது AJITH INDIAN CRICKET TEAM OPS சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN RAJINIKANTH TAMIL ACTRESS ஓபிஎஸ் NELLAI கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL நெல்லை விடுமுறை சூர்யா தென்காசி வடகிழக்கு பருவமழை மதுரை திருப்பரங்குன்றம் தூத்துக்குடி 2024 T20 WORLDCUP கீர்த்தி சுரேஷ் கள்ளக்காதல் ELECTION COMMISSION அஜித் தேவர் CSK தீபாவளி வன்னியர் SURIYA