தேசிய தடகள போட்டியில் திசையன்விளை மாணவி சாதனை!
69ஆவது இந்திய பள்ளிக்குழுமங்களுக்கு இடையிலான தேசிய SGFI தடகள விளையாட்டுப் போட்டி, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் டிசம்பர் 1 முதல் 4 வரை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சார்பில் 30க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்தப் போட்டியில் 14 வயது பிரிவில், நாலந்துலா ச. முத்துக்குமார் இசக்கியம்மாள் தம்பதியினரின் மகள் திசையன்விளை டேனியல் தாமஸ் பள்ளியைச் சேர்ந்த மு.இ. ராஜேஸ்வரி (வயது 14) நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் பிரிவுகளில் கலந்துகொண்டு சிறப்பான சாதனைகளைப் படைத்துள்ளார்.
🏅 நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம்
ராஜேஸ்வரி 5.18 மீட்டர் நீளம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்று மாநிலத்திற்கும், தனது பள்ளிக்குமான பெருமையை உயர்த்தினார்.
🏅 உயரம் தாண்டுதலில் அசத்தல் முயற்சி
உயரம் தாண்டுதல் பிரிவில் 1.46 மீட்டர் உயரம் தாண்டிய அவர், மூன்றாவது இடத்தில் நான்கு போட்டியாளர்களுடன் இணையாக இருந்தாலும், விதிமுறைகளின்படி 6வது இடம் வழங்கப்பட்டது.
மு.இ. ராஜேஸ்வரி தற்போது திசையன்விளை டேனியல் தாமஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இது தேசிய மட்டத்தில் இப்பள்ளிக்கு கிடைக்கும் இரண்டாவது பதக்கம் என்பதும் சிறப்புக்குரியது.
மாணவியின் மு.இ. ராஜேஸ்வரியின் இந்த சாதனையை வாழ்த்தி பள்ளித் தாளாளர் ஒரு தங்கச் செயினை பரிசாக வழங்கினார். பள்ளித் தாளாளர், தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்கள், மற்றும் நாலந்துலா ஊர் பொதுமக்கள் அனைவரும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்த வெற்றிக்கான பின்னணியில் தன்னுடன் இருந்த பள்ளித் தாளாளர், உடற்கல்வி ஆசிரியர்கள் — நெ. ஜெனிஸ்கர், அ. அனிற்றா ஐரின்,
மேலும் தனது பெற்றோர்கள் ஆகியோருக்கு மு.இ. ராஜேஸ்வரி தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S