பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர். அரசியல் விமர்சகராக இருந்த அவர், ‘‘சவுக்கு மீடியா’’ என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இதற்கிடையே, தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் சவுக்கு சங்கர் தங்கியிருந்த போது அவரது காரில் இருந்தும் அவரது உதவியாளரிடமிருந்தும் தடை செய்யப்பட்ட 2.5 கிலோ கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதே வழக்கில் குண்டர் சட்டம் பதியப்பட்டு சில வாரங்கள் சிறையில் இருந்தார். இந்த சிறை உத்தரவை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்தும், அவரை உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி அவர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதுடன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மதுரை மத்திய சிறையில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் சவுக்கு சங்கர் வெளியே வந்தார். இந்நிலையில் சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு சவுக்கு சங்கர் ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து சவுக்கு சங்கருக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பித்து போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. அது என்ன?
உங்களுக்கு சொந்தமானத ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்?
சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!