தைப்பூசத்தை முன்னிட்டு, சென்னை, எழுகிணறு, வள்ளலார் வசித்த வீட்டில் சன்மார்க்க கொடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்றி வைத்து, சிறப்பு வழிபாடு மற்றும் திருவருட்பா 6-ம் திருமுறை பாராயணம் நிகழ்வில் கலந்து கொண்டு, அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர், அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வடலூரில் எந்த மரங்களும் வெட்டப்படவில்லை, ஜோதி தரிசனம் அனைத்து பக்தர்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக வளர்ந்துவிட்ட கிளைகளை தான் ஒழுங்குபடுத்தினோம். கிளைகளை வெட்டியதற்கு எந்த பக்தர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஏதாவது ஆதாரங்கள் இருந்தால் கொடுங்கள் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்மீகமாக செல்பவர்கள் சாதி, சமயங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஓரு தாய் மக்கள் என்ற உணர்வோடு செல்வதுதான் ஏற்புடையது. ஆகவே பிளவுபடுத்துகின்ற சக்திகளுக்கு ஆன்மீக அன்பர்கள் செவி சாய்க்காமல் ஆன்மீக பூமி தமிழகம் என்று நிரூபிக்கின்ற வகையில் ஒற்றுமையோடு இருக்க வேண்டும்.
செங்கோட்டையன் கேட்ட கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்காமல், ஜெயக்குமார் தான் பதில் அளித்துள்ளார். மற்ற இயக்கங்களில் ஊடுருவுவது எங்களுடைய பழக்கம் அல்ல. அதில் தலையிடுவதை எங்கள் தலைவர் எப்போதுமே அதை விரும்ப மாட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
த.வெ.க. தலைவர் விஜயுடன் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து குறித்து, அமைச்சரிடம் கேட்டே பாது, 'மக்களின் அன்பை பெற்றவர்கள், மக்களோடு பயணிப்பவர்களுக்கு எதிராக வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் இருக்கும் என்று தெரியவில்லை. நாங்கள் மக்களோடு கூட்டணி வைத்து இருக்கின்றோம். ஈரோடு இடைத்தேர்தல் வெற்றிதான் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு. 2026-ம் ஆண்டு தேர்தலிலும் முதல்-அமைச்சர் கூறியபடி 200 தொகுதிகளையும் தாண்டி உறுதி மிக்க வெற்றியை பெறுவோம். முதல்-அமைச்சர் 2-வது முறையாகவும் ஆட்சிப்பொறுப்பை ஏற்பார் என்றார்.
வாள் இல்லாமல் கேடயம் மட்டும் எப்போதும் வைத்திருக்கும், போருக்கு போகாத வீரன் அவன் யார்?
உருவம் இல்லாதவன் சொன்னதைத் திரும்பச் சொல்லுவான் அவன் யார்?
ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
சட்டசபையில் சபாநாயகர் அப்பாவுவுக்கு எதிராக அ.தி.மு.க.வினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர். சட்டசபை தலைவர் அனைவருக்கும் பொதுவானவர். மக்கள் பிரச்சனைகளை அவையில் பேச அனுமதி தரவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறினார். இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் எம்எல்ஏ செங்கோட்டையன் பங்கேற்காத நிலையில் அவருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது..தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், வரும் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன், வேளாண்மைக்கான பிரத்யேக நிதிநிலை அறிக்கையும் மார்ச் 15 அன்று தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை, ராதாபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வான அப்பாவு, கடந்த 4 ஆண்டுகளாக சபாநாயகராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், சபாநாயகர் அப்பாவுவை அந்த பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் (அ.தி.மு.க.) கடந்த ஜனவரி மாதம் கொடுத்துள்ளார். இந்நிலையில், சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அளித்துள்ள நம்பிக்கையில்லாத்
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டுகளில் எவ்வளவு பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது என்பது தொடர்பாக நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள விவரங்களுக்கும், சில மாதங்களுக்கு முன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட புள்ளிவிவரங்களுக்கும் இடையே மிகப்பெரிய முரண்பாடு நிலவுகிறது. வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடுவதில் தி.மு.க.
சென்னை: ரமலான் மாதத்தையொட்டி, தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., அரங்கத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாவட்டத்திற்கு 5 இஸ்லாமிய நிர்வாகிகளுக்கு தவெக அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்க விஜய் மாலை 5 மணியளவில் வருகை தந்தார். விஜய்யை காண அதிக அளவில் பொதுமக்கள்
சிவகாசி : விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க.வில் ராஜேந்திர பாலாஜி குறுநில மன்னர்போல் செயல்படுவதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மாபா. பாண்டியராஜன் பேசினார். இந்த நிலையில் இதற்கு சிவகாசியில் நடந்த அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசும்போது கூறியதாவது:- மாவட்டச் செயலாளரான நான் இருக்கும் போது மாபா.
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நாளை மாலை இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று நோன்பு திறந்து வைக்கிறார். மேலும், நோன்பு திறப்பில் கலந்து கொள்ளும் இஸ்லாமியர்களுக்கும் அவர் விருந்தளிக்க உள்ளார். இந்நிலையில், நளை நடைபெறவுள்ள நோன்பு நிகழ்ச்சிக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை
விஜயலட்சுமி விவகாரம் தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், சீமானுக்கு எதிரான வழக்கை புலன் விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து இருக்கிறது. சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில், சென்னை வளசரவாக்கம் போலீஸார் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதை ரத்து
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
செங்கோட்டையன் ஏன் எங்களை தவிர்க்கிறார்..? - எடப்பாடி பழனிசாமி பதில்
தி.மு.க. ஆட்சியில் எத்தனை பேருக்கு அரசு வேலை? யார் சொன்னது சரி? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!