நெல்லை மாவட்டம், உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!
சேரன்மாதேவி சப் கலெக்டர் விசாரணைக்கு அழைத்த நிலையில் ஆவணங்களை வாங்காமல் ஒருதலைபட்சமாக பேசியதால் கூட்டத்திலிருந்து வெளியேறிய இந்துமுன்னணி மாநில துணை தலைவர் V.P.ஜெயக்குமார்..
திருநெல்வேலி மாவட்டம் உவரி அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கிறிஸ்தவ மதத்தை பெருமையாகவும் இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசிவரும் தமிழக சபாநாயகர் அப்பாவு தேரோட்டத்தை துவக்கி வைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் சார்பில் இந்துமுன்னணி புகார் அளித்துள்ளது...
இந்நிலையில் இன்று காலை திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி சப் கலெக்டர் அலுவலகத்தில் விசாரணைக்காக ஆவணங்களுடன் ஆஜராக இந்துமுன்னணி மாநில துணைத்தலைவர் திரு V.P.ஜெயக்குமார் அவர்களுக்கு சேரன்மகாதேவி உதவி கலெக்டர் சம்மன் அளித்திருந்தார்.
அதனை தொடர்ந்து துணை ஆட்சியர் முன்பு ஆஜராகி உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.
அதில் சபாநாயகர் அப்பாவு அவர்கள் கிறிஸ்தவர்களை உயர்வாக பேசியதையும், இந்து மதம் குறித்து இழிவாக பேசியதையும் ஒரு பென் டிரைவில் பதிவு செய்து சார் ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது.
அதை பெற்றுக்கொள்ள மறுத்த சேரன்மகாதேவி சப் கலெக்டர் இந்த வீடியோ பதிவு எனக்கு தேவையில்லை. இது பொது கோவில் யார் வேண்டுமானாலும் போகலாம் என்று பேசினார்.
அதற்கு இந்துமுன்னணி நிர்வாகி பொதுக் கோவில் என்றால் சமுதாய பாகுபாடின்றி இந்துக்கள் செல்லலாமே தவிர வேறு மதத்தவர்கள் செல்லக்கூடாது என்று அறநிலையத்துறை சட்டமே உள்ளது என்றும்,
பல கோவில்களில் வேற்று மதத்தினருக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு பலகைகளே வைக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தை ஏற்று நம்பிக்கையோடு வழிபடுவதாக அலுவலகத்தில் கையொப்பமிட்டால் தான் ஆலய மரபு படி விழாவில் பங்கேற்க முடியும் என்று கூறியபோதும் அதை ஏற்றுக் கொள்ளாமல் அவர் நீங்கள் தடுக்க கூடாது என்பதை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தார்.
நாங்கள் கொடுக்கும் ஆவணங்களை பார்த்தால் தானே இந்து மதம் பற்றி இழிவாக பேசியது தெரியும் அதை வாங்கவே மறுத்தால் இது எப்படி நியாயமான விசாரனையாக இருக்க முடியும் ?
ஆகையால் விசாரணையை புறக்கணித்து இந்துமுன்னணி மாநில துணைத்தலைவர் V.P.ஜெயக்குமார் அவர்கள் வெளியேறினார்.
விசாரணை என்று அழைத்து விட்டு இந்துக்கள் தரப்பின் விளக்கத்தைக் கூட முறையாக கேட்காத சேரன்மகாதேவி சப்கலெக்டரின் இச்செயலை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
இந்துக்களின் எதிர்ப்பையும் சபாநாயகர் அப்பாவு நாளை தேர் இழுக்க அனுமதித்தால் இந்துக்களை திரட்டி இந்துமுன்னணி போராட்டம் நடத்தும் என இந்துமுன்னணி மாநில துணைத்தலைவர் V.P.ஜெயக்குமார் தெரிவித்தார்..
@AppavuSpeaker @Collectortnv @dinamalarweb @DinamaniDaily @TamilTheHindu @TamilJanamNews
#திருநெல்வேலி #உவரிசுயம்புலிங்கசுவாமி #தேரோட்டம் #சபாநாயகர் #அப்பாவு #இந்துமுன்னணி
அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்?
தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
செங்கோட்டையன் ஏன் எங்களை தவிர்க்கிறார்..? - எடப்பாடி பழனிசாமி பதில்
தி.மு.க. ஆட்சியில் எத்தனை பேருக்கு அரசு வேலை? யார் சொன்னது சரி? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!