INDIAN 7

Tamil News & polling

அ.தி.மு.க.வில் நான் ஒரு குறுநில மன்னர்தான்: மாபா. பாண்டியராஜனுக்கு ராஜேந்திர பாலாஜி மிரட்டல்

07 மார்ச் 2025 10:00 AM | views : 1881
Nature

சிவகாசி : விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க.வில் ராஜேந்திர பாலாஜி குறுநில மன்னர்போல் செயல்படுவதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மாபா. பாண்டியராஜன் பேசினார். இந்த நிலையில் இதற்கு சிவகாசியில் நடந்த அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசும்போது கூறியதாவது:-

மாவட்டச் செயலாளரான நான் இருக்கும் போது மாபா. பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்தால் விட்டுவிடுவேனா? பல கட்சிக்கு சென்றுவிட்டு வந்த மாபா. பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்ததால் நிர்வாகி கன்னத்தில் அறைந்தேன். நீ செய்வதெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க நான் கிறுக்கனோ, பைத்தியக்காரனோ அல்ல. தொலைத்துவிடுவேன். கட்சியை காட்டிக்கொடுத்தவர் மாபா. பாண்டியராஜன்.

எனக்கு வரலாறு உள்ளது. உனக்கு என்ன வரலாறு இருக்கிறது? அ.தி.மு.க.வில் நான் ஒரு குறுநில மன்னர்தான். எனக்கு பின்னால் உள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் வாள் ஏந்திய படை வீரர்கள். என்னை பற்றி பேச வேண்டும் என்றால் விருதுநகரில் வைத்து பேச வேண்டும். சென்னையில் சென்று ஏன் பேசுகிறார் மாபா. பாண்டியராஜன்?

அ.தி.மு.க.விற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு குழி பறிக்கும் வேலை நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க.வில் என்னை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

அ.தி.மு.க.வில் நான் ஒரு குறுநில மன்னர்தான்: மாபா. பாண்டியராஜனுக்கு ராஜேந்திர பாலாஜி மிரட்டல்1

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image சென்னை, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்திருந்தார்.

Image சென்னை, தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பா.ஜனதா ஆயத்த வேலைகளை செய்து வருகிறது.



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்