தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தை அடுத்த சாலைபுதூர் அம்மன் கோவில் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சித்திரை. இவரது மனைவி நீலா புஷ்பா ( வயது 60).இவர்களுக்கு 3 மகன், ஒரு மகள் உள்ளனர்.
அவர்களுக்கு திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். கணவர் இறந்து விட்டதால் நீலா புஷ்பா மட்டும் தனியாக வசித்து வந்தார். இவர் பனங்கிழங்குகள் வியாபாரம் செய்து வருகிறார்.சம்பவத்தன்று இவர் வியாபாரத்திற்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது ரூ.2 லட்சம் ரொக்கப்பணம், 3 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் டி.எஸ்.பி. கென்னடி உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் திருட்டில் ஈடுபட்டது சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார் (40) என்பது தெரியவந்தது. மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
ஜெயக்குமார் பனங்கிழங்கு வாங்குவதற்கு நீலா புஷ்பா வீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளார். அப்போது அவர் வீட்டில் தனியாக வசித்து வருவதையும், அங்கு நகை, பணம் இருப்பதையும் தெரிந்து கொண்டார். அதன்படி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நகை-பணத்தை கொள்ளையடித்துள்ளார்.
மேலும் வெயிலில் சென்றதால் களைத்த அவர் திருட சென்ற வீட்டில் வாளியில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த தண்ணீரீல் குளித்துள்ளதும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து திருடிய நகை-பணத்தை பறிமுதல் செய்தனர்.
கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?
முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன?
சிறகடித்து பரப்பவனை சமாதனத்துக்கு உதார்ணம் சொல்வர் அவன் யார்?
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!