பணம் - தேடல் முடிவுகள்

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

2024-04-25 06:32:52 - 2 weeks ago

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்


கோவையில் பாஜக பணப்பட்டுவாடா... ரூ 81,000 மற்றும் பூத் சிலிப் பறிமுதல்!

2024-04-18 07:00:35 - 3 weeks ago

கோவையில் பாஜக பணப்பட்டுவாடா... ரூ 81,000 மற்றும் பூத் சிலிப் பறிமுதல்! கோவையில் பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய வைத்திருந்த ரூபாய் 81 ஆயிரம் மற்றும் வாக்காளர்கள் விவரம் அடங்கிய பூத் சிலிப் ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் ஒரே கட்டமாக நாளை (19 ஆம் தேதி) மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று மாலையுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்த நிலையில்,


அமைச்சர் அன்பில் மகேஷ் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

2024-04-15 10:52:48 - 3 weeks ago

அமைச்சர் அன்பில் மகேஷ் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறவுள்ளது. வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு ஆகியவை அதற்கான சோதனைகளை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்


ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரம்: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்

2024-04-14 17:26:01 - 3 weeks ago

ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரம்: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் சென்னை எழும்பூரில் இருந்து கடந்த 6-ந்தேதி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை கொண்டுசென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக பணத்தை கொண்டுசென்றதாக வாக்குமூலம் அளித்தனர். இது தொடர்பாக போலீசார்


திமுக எப்போதும் சோதனை காலத்தில் காங்கிரசோடு துணை நிற்கும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

2024-04-13 02:37:30 - 3 weeks ago

திமுக எப்போதும் சோதனை காலத்தில் காங்கிரசோடு துணை நிற்கும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு கோவையில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் கோவை, பொள்ளாச்சி, கரூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தனர். அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தான் ஹீரோ. திமுக எப்போதும் சோதனை காலத்தில் காங்கிரசோடு துணை நிற்கும்.நாட்டுக்கும், மாநிலங்களுக்கும் நம்பிக்கை அளிக்கும்


அமைச்சர் துரைமுருகன் சொந்த கிராமத்தில் ரூ.7.5 லட்சம் பறிமுதல்

2024-04-08 12:35:43 - 1 month ago

அமைச்சர் துரைமுருகன் சொந்த கிராமத்தில் ரூ.7.5 லட்சம் பறிமுதல் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ளது காங்குப்பம் கிராமம். இது அமைச்சர் துரைமுருகனின் சொந்த ஊர் ஆகும். இந்த கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். விவசாயி. வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இவருடைய வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்ய பணம் பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பறக்கும்


அண்ணாமலை இதற்கு பதில் சொல்லியே ஆகணும்... ரெயிலில் பணம் சிக்கியது குறித்து சீமான் கேள்வி

2024-04-07 13:22:58 - 1 month ago

அண்ணாமலை இதற்கு பதில் சொல்லியே ஆகணும்... ரெயிலில்  பணம் சிக்கியது குறித்து சீமான் கேள்வி வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேஷ் ஆனந்தை ஆதரித்து வேலூர் மண்டித்தெருவில் நாம் தமிழர் கட்சி தலைமை சீமான் பிரசாரம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான் கூறியதாவது:- " எல்லா இடத்திலும்தான் காசு கொடுக்கப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தை ஒழுங்கமைக்க வேண்டுமானால் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும்


பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ரூ.4 கோடி பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல்!

2024-04-07 03:29:28 - 1 month ago

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ரூ.4 கோடி பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல்! தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், நகை மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று


நெல்லை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை!

2024-04-06 07:33:48 - 1 month ago

நெல்லை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை! தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.இதற்கிடையே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் சார்பில் வருமான வரித்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2-ந் தேதி சென்னையில் 5 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில்


மாமனாரை லாரி ஏற்றிக் கொலை செய்த மருமகன்..!

2024-04-05 08:52:19 - 1 month ago

மாமனாரை லாரி ஏற்றிக் கொலை செய்த மருமகன்..! தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி விநாயகாநகரைச் சேர்ந்தவர் துரை. இவர், கடந்த 1-ம் தேதி இரவு எட்டயபுரத்தில் இருந்து கோவில்பட்டிக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது குமாரகிரி விலக்கு அருகே அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியதில், துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை