தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி விநாயகாநகரைச் சேர்ந்தவர் துரை. இவர், கடந்த 1-ம் தேதி இரவு எட்டயபுரத்தில் இருந்து கோவில்பட்டிக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது குமாரகிரி விலக்கு அருகே அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியதில், துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டறிய, போலீஸார் கோவில்பட்டி சாலையில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதில், ஒரு லாரி அதிவேகமாக கோவில்பட்டியில் இருந்து எட்டயபுரத்தை நோக்கி சென்றது. அதே லாரி, சிறிது நேரத்தில் மீண்டும் கோவில்பட்டியை நோக்கி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இந்த வழக்கை விசாரிக்க எட்டயபுரம் காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், உடனடியாக எட்டயபுரம் அருகே தோழ்மாலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் நாகராஜ் என்பவரை பிடித்து விசாரித்தனர்.
இதில், உயிரிழந்த துரையின் மகளை திருமணம் செய்த கோவில்பட்டி விநாயகாநகரைச் சேர்ந்த உதயகுமார் என்ற கடம்பூர் சின்ன குமாரராஜா என்பவரின் ஏற்பாட்டில் அதிவேகமாக லாரியை இயக்கி துரை சென்ற பைக் மீது மோதவிட்டு, அவரைக் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து உதயகுமார், அவர் நண்பர்களான லாரி உரிமையாளர் நாகராஜ், லாரி ஓட்டுநரான கயத்தாறு அருகேயுள்ள பன்னீர்குளத்தைச் சேர்ந்த சிவராம் ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், சின்னகுமாரராஜாவுக்கும், அவரது மாமனார் துரைக்கும் இடையே ரியல் எஸ்டேட் தொழில் தகராறு மற்றும் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை இருந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரியல் எஸ்டேட்டில் ஒரு நிலம் விற்பது தொடர்பான விவகாரத்தில் துரை, தன் மருமகனான உதயகுமாரை அவதுறாகப் பேசியுள்ளாராம். இது உதயகுமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவரை கொலை செய்ய முடிவெடுத்த கடம்பூர் சின்னகுமாரராஜா, நாகராஜ் மற்றும் சிவராம் ஆகியோருடன் சேர்ந்து கோவில்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் நின்று திட்டம் தீட்டி உள்ளார். இதில், எட்டயபுரம் அருகே குமாரகிரி விலக்கை கடந்தவுடன் காட்டுப்பகுதி உள்ளது.
அப்பகுதியில் வைத்து, அவர் மீது லாரியை மோதவிட்டு, கொலை செய்துவிட்டால், அது விபத்து வழக்காக போய்விடும் என முடிவெடுத்துள்ளனர். இதையடுத்து, கடந்த 1-ம் தேதி மாலை துரையை தொடர்பு கொண்ட சின்னகுமாரராஜா, எட்டயபுரத்தில் ஒருவர் பணம் தர வேண்டும். அதனை சென்று வாங்கி வாருங்கள் என அனுப்பினார். இதனை நம்பிய அவர் எட்டயபுரத்துக்கு சென்றார். பின்னர் அவரை இளம்புவனத்துக்கு வரும்படி கூறியுள்ளார். இதனால் துரை இளம்புவனத்துக்கு வந்துள்ளார். இப்படி போனில் தொடர்பு கொண்டு அலைக்கழித்துள்ளார்.
அப்போது லாரி ஓட்டுநரிடம் கூறி, துரையின் பைக்கின் பதிவு எண் மற்றும், துரையின் அடையாளங்களைக் கூறி அனுப்பினார். ஓட்டுநர் சிவராம், துரையை இளம்புவனம் பகுதியில் அடையாளம் கண்டார். இதையடுத்து, துரையை ஊருக்கு புறப்பட்டு வரும்படி கூறியுள்ளார். அவர் குமாரகிரி அருகே காட்டுப்பகுதியில் வந்தபோது, பின்னால் லாரி கொண்டு மோதி துரையை கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீஸார், விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர்.
ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?
ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம் – அவன் யார்?
கண் உண்டு ஆனால் பார்க்க முடியாது அது என்ன?
சென்னை மற்றும் தூத்துக்குடி இடையே கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என்று மக்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ரெயில்வே சட்டத் திருத்த மசோதா 2024-ன் மீது நடைபெற்ற விவாதத்தில் தெற்கு ரெயில்வே ரெயில்கள் பலவற்றில் அடிப்படை வசதிகள் இல்லாததையும், ரெயில்வே
மதுரை: ''பருவ வயதில் காதலர்கள் கட்டிப்பிடித்து முத்துமிடுவது இயல்பானது ஒன்று தான். இதை ஒரு காரணமாக வைத்து காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததாக இளைஞர் மீது வழக்கு பதிவு செய்தது சரியல்ல'' என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது
விஜய்யுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா? திருமாவளவன் பதில்
அதிமுக துரோக வரலாற்றுக்கு எடப்பாடி பழனிசாமி அடையாளம்: மு.க.ஸ்டாலின் தாக்கு
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்- திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!