POLLING FLAMES

 

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ரூ.4 கோடி பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல்!

2 years ago 07 ஏப்ரல் 2024 03:29 AM | views : 246
தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், நகை மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 8:10 மணிக்கு வழக்கம்போல் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் மூலமாக அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் தேர்தல் செலவிற்கு பணம் கொண்டு செல்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் இரவு 8:35 மணிக்கு வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீரென ஏறிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பயணிகளில் உடமைகளை வாங்கி அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு சந்தேகத்துடன் இருந்த 3 பேரின் உடமைகளை எடுத்து பரிசோதித்ததில் அவர்களது பைகளில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரையும் உடனடியாக பணத்துடன் தாம்பரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் பணத்தை எண்ணிப் பார்க்கும்போது அதில் ரூ,3.99 கோடி பணம் இருந்தது தெரியவந்தது.

பிடிபட்டவர்களிடம் அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது. அந்த பணத்தை அவர்கள் யாருக்காக கொண்டு சென்றார்கள்? வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக கொண்டு சென்றார்களா? பணத்தை அவர்களுக்கு கொடுத்து அனுப்பியது யார்? என்பது குறித்து பிடிபட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், பணத்துடன் பிடிபட்டவர்கள் புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பா.ஜ.க. உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள் என்பது தெரியவந்தது. நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக கைதான மூவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். தொடர்ந்து 3 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN மு.க.ஸ்டாலின் TAMIL NADU TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் AIADMK டிடிவி தினகரன் PMK பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் கனமழை இந்திய அணி பாமக முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் PARLIAMENT ELECTION தமிழகம் கோவை CONGRESS UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM EDAPPADI PALANISWAMI COIMBATORE அன்புமணி ராமதாஸ் திருமாவளவன் கொலை TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி கைது OPS சீமான் தமிழ்நாடு அமமுக KEERTHY SURESH AJITH தமிழக சட்டசபை தேர்தல் NELLAI BIGG BOSS TAMIL THIRUMAVALAVAN சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS நெல்லை ஓபிஎஸ் RAJINIKANTH கொரோனா வன்னியர் ELECTION COMMISSION மதுரை சூர்யா கீர்த்தி சுரேஷ் SURIYA தூத்துக்குடி அஜித் கள்ளக்காதல் வடகிழக்கு பருவமழை தேவர் தென்காசி CSK தீபாவளி திருப்பரங்குன்றம் விடுமுறை