தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

வங்கி ஊழியர்கள் போராட்டம்: அவசரப் பணிகளை உடனே முடியுங்கள்- இந்தியன் வங்கி அறிவுறுத்தல்!

வாரத்தில் 5 நாட்கள் வேலை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஐக்கிய வங்கி தொழிற்சங்கங்கள் செப்டம்பர் 28 முதல் செப்டம்பர் 30 வரை மூன்று நாட்கள் அகில இந்திய அளவில் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதன் காரணமாக, இந்தியன் வங்கி உட்பட பொதுத்துறை வங்கிகளின் நேரிடை சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், வாடிக்கையாளர்களுக்கு இந்தியன் வங்கி முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

வரும் செப்டம்பர் 26 சனிக்கிழமை (நான்காவது சனிக்கிழமை) மற்றும் செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை ஆகியவை வழக்கமான விடுமுறை நாட்களாகும். இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளதால், கிளைக் கிளைகளில் பணிகள் தொடர்ச்சியாக 5 நாட்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

வங்கி கிளைகளுக்கு சென்று நேரடியாக மேற்கொள்ள வேண்டிய பணிகளான காசோலை பரிவர்த்தனைகள், ரொக்கம் டெபாசிட் செய்தல் மற்றும் ஆவண சரிபார்ப்பு போன்ற சேவைகளில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் தங்களது அவசர மற்றும் முக்கியமான வங்கிப் பணிகளை செப்டம்பர் 26-ஆம் தேதிக்கு முன்பாகவே முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைநிறுத்த நாட்களின் போது பொதுமக்கள் சிரமத்தைத் தவிர்க்க மொபைல் பேங்கிங், இணையவழி வங்கிச் சேவை, யுபிஐ செயலிகள், ஏடிஎம் மற்றும் ரொக்கம் செலுத்தும் இயந்திரங்கள் போன்ற டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டிஜிட்டல் வங்கிச் சேவைகள் மற்றும் ஏடிஎம் பணப் பரிவர்த்தனைகள் தடங்கலின்றி இயங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel