அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்... தமிழக பள்ளிகளில் முன்கூட்டியே தேர்வு நடத்த முடிவு?

தமிழ்நாட்டில் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவி வரும் நிலையில், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில், 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வு முன்கூட்டியே நடக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 24ஆம் தேதிக்கு பதில் 17ஆம் தேதியே தேர்வு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel