சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி. வி.தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , சென்னை மூலக்கடை பேருந்து நிலையம் அருகே 27 கோடி ரூபாய் மதிப்பிலான 2.7 கிலோ மெத்தபெட்டமைன் எனும் கொடியவகை போதைப் பொருளை பறிமுதல் செய்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இருவரை கைது செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் நாளுக்கு நாள் பெருகிவரும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் அதனை கட்டுப்படுத்தாமல் தமிழகத்தை போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை மையமாக மாற்றியிருக்கும் திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
கொடியவகை போதைப் பொருட்கள் தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்கவோ, பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் அவற்றை அடியோடு ஒழிக்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, ஆண்டுதோறும் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழியை மட்டும் ஏற்பது எந்தவகையிலும் பயனளிக்காது.
எனவே, கும்பகர்ண தூக்கத்தில் இருந்து இனியாவது கண்விழித்து இளைய தலைமுறையின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை அடியோடு தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார்.
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம் – அவன் யார்?
சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?
தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: தமிழக அரசு
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக PoK மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம்
அமித்ஷாவுடன் சந்திப்பு: கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொண்டு வெளியேறிய இ.பி.எஸ்.
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!