சென்னையில் நேற்று நடைபெற்ற 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் வி.சி.க. பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியபோது, தமிழ்நாட்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்றார். பிறப்பால் ஒரு முதல்-அமைச்சர் இங்கு உருவாகக் கூடாது. தமிழ்நாட்டை ஒரு கருத்தியல் தலைவர்தான் ஆள வேண்டும்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்து குறித்து அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது;-
"தேர்தல் அரசியல் மூலம் மக்கள் ஒரு கட்சிக்கு வாக்களித்து முதல்-அமைச்சரை தேர்ந்தெடுக்கிறார்கள். இதில் பிறப்பால் ஒருவர் முதல்-அமைச்சராவதாக ஆதவ் அர்ஜுனா சொல்லியிருப்பது ஏன் என்று எனக்கு புரியவில்லை. துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தேர்தலில் எம்.எல்.ஏ.வாக ஜெயித்துவிட்டுதான் வந்திருக்கிறார். அதை நாம் எப்படி குறை சொல்ல முடியும்?
தேர்தலில் நிற்காமல் நேரடியாக பதவிக்கு வந்தால் அதை குறை சொல்லலாம். ஒருவரின் தந்தையோ, தாயோ அரசியலில் இருக்கிறார்கள் என்பதற்காக அவர்களின் வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாது என்பது இல்லை. சில பதவிகளுக்கு அனுபவம் மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. நான் தி.மு.க.விற்கோ, அல்லது வாரிசு அரசியலுக்கோ ஆதரவாக பேசவில்லை. எதார்த்தமான கருத்தை சொல்கிறேன்.
எந்த கட்சியாக இருந்தாலும், அனைத்து தொகுதிகளிலும் ஜெயிப்போம் என்றுதான் சொல்வார்கள். அதை எதிர்க்கட்சிகள் முறியடிப்போம் என்று சொல்வது தவறு இல்லை, ஆனால் அதை ஆணவம் என்று எப்படி சொல்ல முடியும்? மக்கள்தான் இறுதி முடிவெடுக்கப் போகிறார்கள்."
இவ்வாறு டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவர் யார்?
தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட முயற்சிப்பது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முரணானது. தமிழகத்தின் வட மாவட்டங்களை பாலைவனமாக்கும் முடிவை ஆந்திர அரசு கைவிட வேண்டும் . பாலாற்றின் குறுக்கே மீண்டும் தடுப்பணைகள் கட்டப்படும் என ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு
திருவண்ணாமலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், மருத்துவர் அய்யா திரு.ராமதாஸ் அவர்களை டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை நிமித்தமான சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அங்கீகாரம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி
சீமானுக்கு ஆதரவாக ஆதாரம் தருகிறேன் - அண்ணாமலை
உடல் இச்சை வந்தால் தாயோ, மகளோ.. பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு..
பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் முடிவை ஆந்திர அரசு கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!