மக்கள் பணத்தை தொட மாட்டோம்; தொட்டவர்களை விடமாட்டோம்: முதல்-அமைச்சர் விஜய்
சென்னை
தமிழக சட்டசபை நிறைவு நாளான இன்று, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பேசினார். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. ஆட்சி அமைத்துள்ள நிலையில், புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த 18-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பின்னர், 19 மற்றும் 22-ந்தேதிகளில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர். நேற்றைய சட்டசபை கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற பா.ம.க. தலைவர் சவுமியா அன்புமணி, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் பேசினார்கள்.
ஷூட்டிங்கில் இருந்து நேராகஇந்த நிலையில், சட்டசபை நிறைவு நாளான இன்று, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பேசினார். அப்போது அவர், த.வெ.க.வை தேர்ந்தெடுத்த தமிழக மக்களுக்கு மனமார்ந்த நன்றி. மக்கள் சேவையில் ஒன்றிணைந்து பயணித்தால் தமிழகம் முதலிடத்தில் இருக்கும். ஷூட்டிங்கில் இருந்து நேராக சட்டசபைக்கு வந்து சி.எம். ஆன மாதிரி சிலர் இமேஜ் கிரியேட் பண்றாங்க. அவர்கள் பாணியிலேயே பதில் கூறுவதென்றால், அது வெறும் ரீல் தான் ரியல் கிடையாது. ஒவ்வொரு வீட்டிலும் இதயத்தில் இடம் பிடித்ததால் சி.எம். ஆனேன்.
நிறைய சூழ்ச்சிஎதிர்த்து பேசினால்தான் எதிர்க்கட்சி என நிரூபிக்க முடியும் என நினைத்துக்கொண்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு வணக்கமும் நன்றியும். கரூர் சம்பவத்தில் 41 பேரை இழந்த வேதனையை எப்படி சொல்வதென்றே தெரியவில்லை. வெளியில் சொல்ல முடியாத நிறைய சூழ்ச்சி.. அரசியல்னா இப்படியெல்லாம் கொடூரமாக இருக்கணுமா என்ன?
சட்டம் - ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. பெண்கள் பாதிக்கப்படுவதை ஒருபோதும் சகித்து கொள்ள முடியாது. எதிர்ப்பவர்கள் எதிர்க்கட்சி என்பதால் ஆட்சி மீது ஆயிரம் பழிகளை போடலாம்.
மக்கள் பணம்போதைப்பொருள் விவகாரத்தை பல வருடம் கண்டு கொள்ளாததால் தற்போது பிரச்சினை. கடந்த 9 மாதகாலமாக தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி. இல்லை. கடந்த ஆட்சியில் நடந்த சம்பவங்களுக்கு தற்போது விடை கிடைக்கிறது என்று பேசினார். தொடர்ந்து அவர் பேசும்போது, மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட தொடமாட்டோம். தொடவும் விடமாட்டோம். தொட்டவர்களையும் விடமாட்டோம். தப்பே செய்யமாட்டோம்.
கூட்டணி ஆட்சிதி.மு.க. தயவால்தான் ஆட்சி நடக்கிறது என பேசுகின்றனர். தி.மு.க. தயவால் அல்ல. மக்களின் தயவால் நடக்கிறது. நேர்மையாகத்தான் இருப்போம் என நினைப்பவர்கள் மட்டுமே கூட்டணி ஆட்சி தருவார்கள். ஊழலில் ஊறிப்போனவர்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரமாட்டார்கள் என்றார்.
மக்கள் நமக்கு வாக்கு அளித்தது தப்பாம். குடும்பம் குடும்பமாக வாக்களித்தது தவறாம். வாக்களித்த மக்களை தவறாக பேசுகின்றனர். எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வ கருத்துகளை கூறினால் ஏற்றுக்கொள்வோம். எங்களுக்கும் நக்கல், நையாண்டி தெரியும். சோபா மாடல் அரசு என்கின்றனர். அது எனக்கு புரியவே பல நாட்கள் ஆனது.
எம்.ஜி.ஆர். காலம் தொடங்கிசோபா, சேர், டீப்பாய் உள்ளிட்ட பர்னிச்சர் பிசினஸ் எல்லாம் வெளியே போய் பேசுங்கள். எம்.ஜி.ஆர். காலம் தொடங்கி 50 ஆண்டுகளாக இதே டெக்னிக்கை பின்பற்றி வருகின்றனர்.
பேசு பேசு என சொல்கின்றனர். 5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூர் ஆட்டம் கண்டது. என்று பேசியுள்ளார். காவல் துறையை கையில் வைத்திருந்தவர்கள் போதைப்பொருளை ஏன் ஒழிக்கவில்லை? என்றும் கேள்வி எழுப்பினார். முதல்-அமைச்சர் விஜய்யின் பேச்சுக்கிடையே தி.மு.க.வை சேர்ந்த எதிர்க்கட்சியினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பகிரவும்: