சென்னையில் 2 நாட்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 443 பேர் மீது வழக்கு

சென்னை,

சென்னையில் வாரத்தில் 2 நாட்களை தேர்வு செய்து திடீர் வாகன சோதனை நடத்தி போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், இந்த நடவடிக்கை தொடர்கிறது. விபத்தில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கும் நோக்கத்தோடு இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


இதற்காக 122 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 355 போக்குவரத்து போலீசார், வாகன சோதனையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். கடந்த 2 நாட்களில் இந்த சோதனை நடவடிக்கைகளில், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 443 பேர் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.


அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 110 பேர் மீதும், 'ஹெல்மெட்' அணியாத குற்றத்திற்காக 2,272 பேர் மீதும் வழக்குப்போடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற வாகன சோதனை நடைபெறும் என்று போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel