INDIAN 7

Tamil News & polling

மருமகனுடன் ஓடிய மாமியார்.. கலங்கி நிற்கும் அப்பா, மகள்!

05 ஜனவரி 2023 02:16 PM | views : 791
Nature

ராஜஸ்தானில் மருமகனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை மீட்டு தர வேண்டும் என கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில் உள்ளது சியாகாரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். ரமேஷ் தன்னுடைய மூத்த மகள் கிஷ்ணாவை நாராயணன் ஜோகி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

நாராயணன் ஜோகி, தன்னுடைய புது மனைவியுடன், மாமியார் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற போது, மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையே திடீரென காதல் பற்றிக் கொண்டது. இந்த காதல் ஒரு கட்டத்திற்கு மேல் கள்ளக்காதலாக மலர்ந்தது. இருவரும் பிரிந்து வாழ முடியாத நிலைக்கு சென்றதால், புத்தாண்டில் புது வாழ்க்கையை தொடங்கலாம் என 1ஆம் தேதி விடியற்காலையில் வீட்டை விட்டு இருவரும் ஓடியுள்ளனர்.

விடிந்ததும் எழுந்த ரமேஷ், மனைவியும், மருமகனையும் காணவில்லை என்பதை அறிந்து போலீசில் புகார் அளித்தார். அதில், கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி மருமகன் தனியாக வீட்டிற்கு வந்ததாகவும், இருவரும் சேர்ந்து மது அருந்தியதாகவும் தெரிவித்தார். மது போதையில் தான் மயங்கிய பிறகு இருவரும் ஓடியதாக கூறிய அவர், தன் மனைவியை மீட்டு தாருங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மாமியார் மருமகனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image ராஜஸ்தான் மாநிலம் பிகனேர் மாவட்டம் நபசர் கிராமத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி கடந்த 6ம் தேதி காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். கிராமத்தில் உள்ள சாலையில் நடந்து சென்றபோது மாணவியை

Image சென்னை, சென்னை வடபழனியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் நேற்று இரவு ஆங்கில புத்தாண்டை தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். பின்னர் மாணவி தனது வீட்டில் உள்ள மாடி படிக்கட்டில்

Image கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சென்னை சென்டிரல் - மங்களூரு, ஈரோடு - நாகர்கோவில், செந்திராபாத் - வேளாங்கண்ணி, பெங்களூரு - கொல்லம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்