தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த போலீஸ்காரர் கைது

ஏப்ரல் 17, 2023 | 05:54 am | views : 1751
திருப்பதி :ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், குர்ஜாலா பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி. அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் 10-ம் வகுப்பு தேர்வுகள் நிறைவடைந்தன. கடைசி நாள் தேர்வு முடிந்ததும் மாணவி வீட்டிற்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது சிறுமியிடம் தாகேபள்ளி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் நாக பாபு நைசாக பேச்சு கொடுத்தார். சிறுமியை ஏமாற்றி அங்குள்ள லாட்ஜுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
தாமதமாக வீட்டிற்கு வந்த சிறுமியிடம் குடும்பத்தினர் விசாரித்தபோது நடந்த சம்பவத்தை கூறினார். இது குறித்து அவரது குடும்பத்தினர் பிடுகுரல்லா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து நாகபாபுவை கைது செய்தனர்.இதனால் அவமானம் அடைந்து மனமுடைந்த நாகபாபுவின் மனைவி அனுஷா விஷம் குடித்தார். வீட்டில் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார்.
Also read... குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை - தமிழக அரசு அறிவிப்பு!
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அனுஷாவை மீட்டு தாகேபள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய போலீஸ்காரர் மாணவியை பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
![]() |
![]() |
![]() |
![]() |
குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை - தமிழக அரசு அறிவிப்பு!
மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையில் சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன. இதில் இன்னும் சில பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. எனினும், பெரும்பாலான இடங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி அறிவித்துள்ளது.
கட்டணமின்றி ஆவணங்களை மீண்டும் பெற சிறப்பு முகாம்கள் - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த