விமல் நடித்துள்ள குலசாமி திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு
விழா வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் அமீர்,
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் அமீர் தெரிவித்ததாவது..
” சென்சார் செய்யப்பட்ட பிறகு படத்திற்கு தடை சொல்வது ஏற்புடையது அல்ல.
திரைப்படம் மூலம் அரசியல் விழிப்புணர்வு செய்ய வேண்டுமே தவிர அரசியல்
கலவரங்களை செய்யக் கூடாது.
தனி மனித விமர்சனத்தை யார் முன்வைத்தாலும் ஏற்புடையது அல்ல. முத்துராமலிங்க தேவர் வேறு பெரியார் வேறு. இருவரும் இருவேறு தளத்தில் இருப்பவர்கள் அவர்களை ஒப்பிடவே கூடாது.
ஏப்ரல் 14 அன்று எல்லாரும் போல நானும் ஆர்வமாக இருந்தேன் அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடுவார் என்று . ஆனால் அவர் வருமானவரித்துறை அதிகாரி
போன்று சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கொடுத்தது தான். இதில் எதுவும் புதியது இல்லை.
தவறான கருத்தை பரப்பி தமிழகத்தில் நடைபெறும் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பது தான் அண்ணாமலை திட்டம். நாடாளுமன்ற தேர்தலுக்கு மக்கள் மத்தியில் இதை கொண்டு செல்ல நினைத்தார்கள். ஆனால் எனக்கு தெரிந்து அது புஸ்வானமாக மாறிவிட்டது.
ஆர் எஸ் எஸ் பேரணி நடந்தது எனக்கு வருத்தம் தான். அமைதியாக நடந்ததா இல்லையா
என்பது முக்கியம் இல்லை. இந்த பேரணியால் மக்களுக்கு என்ன பயன். ஆனால் வட
நாட்டில் ஏன் கத்தி வேல் உடன் வருகின்றனர். இது தொடக்கம் தான் இதை வைத்து தான்
அடுத்து மீண்டும் நடத்துவார்கள்” என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.
ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?
பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!