INDIAN 7

Tamil News & polling

சந்திரபாபு நாயுடு NDA கூட்டணியை நிராகரிக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை

05 ஜூன் 2024 07:13 AM | views : 787
Nature

சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-மக்களவை தேர்தலில் பெற்ற வெற்றியை தமிழ்நாட்டு மக்களுக்கு சமர்ப்பிக்கிறோம். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிக்கு தலைமையேற்று நடத்திய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழ்நாட்டின் குரலை நாடாளுமன்றத்தில் பேசவுள்ள எங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துகள்.இந்தியாவை கூறுபோட நினைத்த பாஜகவிற்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். கூட்டணி ஆட்சியமைக்க மோடி நினைக்கிறார். ஆனால் அது ஒரு போதும் நடக்காது. இந்தியா கூட்டணி கட்சியினர் மக்களின் குரலாக இருப்பார்கள்.ராமர் கோவில் அமைந்துள்ள தொகுதியில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.

பிரதமர் மோடியை ராமரும் கைவிட்டார், விவேகானந்தரும் கைவிட்டார். ராமர் நிராகரித்த பாஜகவை சந்திரபாபு நாயுடு ஏன் நிராகரிக்கவில்லை?. மக்கள் நலனுக்காக மோடியை சந்திரபாபு நாயுடு நிராகரிக்க வேண்டும்.பிரதமர் நரேந்திர மோடி எழுதி கொடுப்பதை தேர்தல் ஆணையம் செய்து கொண்டிருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக தலைமையில் ஆட்சி அமையும் என்றார்; அதன் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான ஆட்சி அமையும் என பிரதமர் மோடி மாற்றி கூறுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார், இதுதொடர்பாக அவர் நாட்டு மக்களுக்கு இ-மெயில் மூலம் அனுப்பி உள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

Image தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் அதிமுக - பாஜக கூட்டணி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே உறுதி செய்யப்பட்டது.

Image சென்னை, கடந்த சட்டசபை தேர்தலில் (2021) டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்த தே.மு.தி.க. 60 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், ஒன்றில் கூட வெற்றி

Image சென்னை, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-, சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்

Image புதுடெல்லி, டெல்லியில் நேற்று முன்தினம் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடந்தது. அப்போது அதில் கலந்து கொண்ட கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங், பிரதமர் மோடியின் பழைய புகைப்படத்தைப்

Image புதுடெல்லி, இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸைக் கொண்டாடுகிறார்கள். அந்த வகையில், இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி முக்கிய தேவாலயங்களில்

Image சென்னை, தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பா.ஜனதா ஆயத்த வேலைகளை செய்து வருகிறது.

Image திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தீபம் ஏற்ற காவல் துறை, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இது



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்