டெல்லி - தேடல் முடிவுகள்

ஆம் ஆத்மி பெண் எம்.பி புகார் மீது 3 நாட்களில் நடவடிக்கை - மகளிர் ஆணையம் வலியுறுத்தல்

2024-05-13 12:29:42 - 3 days ago

ஆம் ஆத்மி பெண் எம்.பி புகார் மீது 3 நாட்களில் நடவடிக்கை - மகளிர் ஆணையம் வலியுறுத்தல் ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மலிவால் அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் (பி.ஏ) பிபவ் குமார், இன்று காலை கெஜ்ரிவாலின் இல்லத்தில் வைத்து தன்னை தாக்கியதாக டெல்லி போலீசிடம் முறையிட்டார். இதைத்தொடர்ந்து கெஜ்ரிவால் இல்லத்துக்கு விரைந்த காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை - சுப்ரீம் கோர்ட்டு

2024-05-03 11:45:56 - 1 week ago

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை - சுப்ரீம் கோர்ட்டு டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து


நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

2024-05-02 06:38:29 - 2 weeks ago

நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு புதுடெல்லி,இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நாடு முழுவதும் 13 மொழிகளில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2024-25 கல்வி ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கியது. www.nta.ac.in, exams.nta.ac.in/NEET என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என


அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு

2024-04-23 10:43:35 - 3 weeks ago

அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 9 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இந்த சம்மனை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த


எதிரிகள் மிரள்கின்றனர்... வெற்றி நம் வசமாகிறது: டாக்டர் ராமதாஸ்

2024-04-12 07:54:45 - 1 month ago

எதிரிகள் மிரள்கின்றனர்... வெற்றி நம் வசமாகிறது: டாக்டர் ராமதாஸ் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் ஓடோடி வந்துவிட்டது. அடுத்த வாரம் இதே நாள், இதே நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில மக்கள் இந்தியத் தேசத்தின் எதிர்காலத்தைத் தங்களின் விரல் நுனிகளால் எழுதிக் கொண்டிருப்பார்கள்; அடுத்த சில மணி நேரங்களில்


ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை

2024-04-09 02:21:51 - 1 month ago

ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் தி.மு.க. நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 9ம் தேதி டெல்லியில் கைது செய்தனர். இதையடுத்து, சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை


இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்?: மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கேள்வி

2024-04-07 04:02:26 - 1 month ago

இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்?: மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கேள்வி பாராளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. வடசென்னை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பால்கனகராஜுக்கு ஆதரவாக, மத்திய பெண்கள் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி நேற்று பிரசாரம் செய்தார். வடசென்னை தொகுதிக்குட்பட்ட திரு.வி.க.நகர் சட்டசபை தொகுதி நம்மாழ்வார்பேட்டை சந்தை பகுதியில் இருந்து திறந்த வாகனத்தில் ஊர்வலமாக


சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத்

2024-04-05 05:17:43 - 1 month ago

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் நடிகை கங்கான ரனாவத் தேர்தலை எதிர்கொள்கிறார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் பா.ஜ.க கூட்டத்தில் பேசிய அவர்,``பா.ஜ.க மீதான என் அதீத விருப்பத்தைப் பார்த்து, மற்ற கட்சிகள் என்னைப் பயமுறுத்தத் தொடங்கினர். என் வீட்டைக் கூட சேதப்படுத்தினர். வரவிருக்கும்


மோடி மீண்டும் பிரதமரானால், பொருளாதாரம் மேலும் உயரும் - அண்ணாமலை

2024-04-04 10:54:40 - 1 month ago

மோடி மீண்டும் பிரதமரானால், பொருளாதாரம் மேலும் உயரும் - அண்ணாமலை திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கவுந்தப்பாடியில் இன்று காலை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் முருகானந்தத்திற்கு ஆதரவு தெரிவித்து திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அண்ணாமலை பேசியதாவது,திருப்பூர் தொகுதியில் மாற்றம் வரவேண்டும். வளர்ச்சி எல்லா பகுதிக்கு வர வேண்டும். தமிழகத்தின் அரசியல்


வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி

2024-04-03 08:49:29 - 1 month ago

வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற 29-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.இருந்தபோதிலும் கேரளாவில் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ள தொகுதி வயநாடு. ஏனென்றால் தற்போது அந்த தொகுதியில் எம்.பி.யாக இருக்கும் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார்.