INDIAN 7

Tamil News & Polling

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

அரசியல் கருத்து கணிப்பு விளையாட்டு சினிமா விடுகதைகள் நடிகைகள்

எதிரிகள் மிரள்கின்றனர்... வெற்றி நம் வசமாகிறது: டாக்டர் ராமதாஸ்

எதிரிகள் மிரள்கின்றனர்... வெற்றி நம் வசமாகிறது: டாக்டர் ராமதாஸ்
ஏப்ரல் 12, 2024 | 07:54 am | Views : 46

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் ஓடோடி வந்துவிட்டது. அடுத்த வாரம் இதே நாள், இதே நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில மக்கள் இந்தியத் தேசத்தின் எதிர்காலத்தைத் தங்களின் விரல் நுனிகளால் எழுதிக் கொண்டிருப்பார்கள்; அடுத்த சில மணி நேரங்களில் பா.ம.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கும்.

தேர்தல் அட்டவணை நேற்று தான் அறிவிக்கப்பட்டது போலத் தோன்றுகிறது. ஆனால், அதற்குள்ளாக கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்து விட்டது. காலம் இவ்வளவு வேகமாக ஓடுவது வியப்பளிக்கிறது என்றால், கால ஓட்டத்தின் வேகத்தை விஞ்சும் வகையில் களத்தில் நீங்கள் ஆற்றும் பணி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்தல் களத்தில் ஓட்டத்தைத் தொடங்கி விட்டால், வெற்றிக் கோட்டைத் தொடும் வரை நின்று இளைப்பாறுவதற்கோ, நமது வேகத்தை நினைத்து பெருமிதப்பட்டுக் கொள்வதற்கோ நேரம் இல்லை. எனவே, உங்கள் சிங்கப் பாய்ச்சலின் வேகத்தை சிறிதும் குறைத்து விடாதே என்று அறிவுறுத்தவே இந்தக் கடிதம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2024 மக்களவைத் தேர்தலில் நாம் ஒரு புதிய வரலாற்றைப் படைக்கப் போகிறோம். தேர்தல் களத்தில் வெற்றி பெறுவதற்கு அனைத்தையும் விட அவசியத் தேவை கோடிகள் தான் என்பது தமிழகத்தில் கடந்த சில பத்தாண்டுகளாக எழுதப்படாத தத்துவமாக இருந்தது. இந்தத் தேர்தலில் அதை முறியடித்து, உழைப்புக்கு முன்னால் கோடிகளால் எதுவும் செய்ய முடியாது என்பதை எனதருமை பாட்டாளி இளஞ்சிங்கங்களாகிய நீங்கள் நிரூபித்திருக்கிறீர்கள். உங்களுக்கு வாழ்த்துகள்.

தமிழ்நாட்டில் நாம் ஆண்ட கட்சியும் இல்லை... ஆளும் கட்சியும் இல்லை. அதனால் நம்மிடம் கோடிகளும் இல்லை. நம்மிடம் இருப்பவை அனைத்தும் கொடிகளும், கொள்கைகளும் தான். இவற்றை வைத்துக் கொண்டு இவர்களால் என்ன செய்து விட முடியும்? என்ற ஏளனப் பார்வையுடன் தான் தமிழகத்தின் இரு கூட்டணிகளும் தேர்தல் களத்தில் நுழைந்தன. ஆனால், சிங்கத்தின் குகையில் சிறு நரிகளால் என்ன செய்து விட முடியும்? என்பதைப் போல நமது உழைப்புக்கு ஈடுகொடுக்க முடியாமல் அக்கட்சிகள் தொலைதூரத்துக்குப் பின்னால் துவண்டு கிடக்கின்றன. நீங்களோ வெற்றிக் கோட்டை நெருங்கி விட்டனர்.தேர்தல் களத்தில் எதிரிகள் அனைவரும் உங்களை கண்டு மிரள்கின்றனர். எல்லோரும் விரும்பும் வெற்றி உங்களுக்கு எளிதாய் வசமாகிறது. இதற்கெல்லாம் காரணம் உங்களது உழைப்புதான். உங்களை போன்ற இளஞ்சிங்கங்களை எனது போர்ப்படைகளாய் பெற்றதை எண்ணி நான் பெருமிதம் கொள்கிறேன்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானத் தேர்தல். ''கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே இங்கு வேரிற் பழுத்த பலா'' என்பதைப் போல தமிழ்நாட்டின் தேவைகளுக்காகவும், கோரிக்கைகளுக்காகவும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க ஆள் இல்லை. 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் 37 பேர் வெற்றி பெற்று நாடாளுமன்ற மக்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டில் தி.மு.க. கூட்டணி சார்பில் 38 பேர் வெற்றி பெற்று டெல்லிக்கு சென்றனர். ஆனால், அவர்கள் ஆறாவது விரலாகத்தான் இருந்தனர். அவர்களால் அவர்களைத் தேர்வு செய்த தொகுதிகளின் மக்களுக்கோ, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கோ எந்தவித பயனும் ஏற்படவில்லை.

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசிடமிருந்து கேட்டுப்பெற வேண்டியவை ஏராளமாக உள்ளன. மக்களவை பிரதிநிதித்துவத்தை மாநிலத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்வது எப்படி? என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்வது பாட்டாளி மக்கள் கட்சிதான். தமிழகத்திற்கான தேவைகள் அதிகரித்திருக்கின்றன. அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றால், தமிழகத்தின் கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்கக் கூடிய, செயல்படக்கூடிய உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டும். அதற்கு பா.ம.க. 10 தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும்.பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் வெற்றிக்கனியை பரிசாக வழங்க தமிழ்நாட்டு மக்கள் தயாராகவே உள்ளனர். அதே நேரத்தில் அந்தக் கனியை பறிக்க நமது உழைப்பும் மிகவும் அவசியம்.

இதை நான் உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து களத்தில் எப்படி உழைக்கிறீர்களோ, அதே உழைப்பை இன்னும் ஒரு வாரத்திற்கு கொடுங்கள். வெற்றி நம் வசமாகி விடும். ஏப்ரல் 19-ம் தேதி உங்கள் உழைப்பை எடைபோடும் நாளாகவும், ஜூன் 4-ம் தேதி சிங்கக்குட்டிகளின் உழைப்பின் பயனைக் கொண்டாடும் நாளாகவும் அமைய வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Keywords: நாடாளுமன்ற தேர்தல் பாமக ராமதாஸ் PARLIAMENTARY ELECTIONS PMK RAMADOSS வன்னியர்

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

விடுகதை :

ஒரு கூடையில் ஆறு ஆப்பிள் இருந்தன. அங்கு இருந்த 6 சிறுவர்களுக்கும் 6 பழங்கள் கொடுத்துவிட்டனர். ஆனால் கூடையில் ஒரு பழம் இருந்தது அது எப்படி?


விடுகதை :

ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?


விடுகதை :

உங்களுக்கு சொந்தமானத ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்?


திமுக எம்பி தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

2024-07-25 03:11:28 - 2 days ago

திமுக எம்பி தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!
கடந்த 2020-ம் ஆண்டு முதன்மை செயலாளர் தங்களை தாழ்த்தப்பட்ட மக்களை போன்று நடத்தியதாக தயாநிதி மாறன் பேசியிருந்தார். இதையடுத்து தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக தயாநிதி மாறன் மீது கோவை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. தயாநிதி மாறன் மீது


பாமகவினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்பப் பெறுக - டிடிவி தினகரன்!

2024-07-22 03:40:09 - 5 days ago

பாமகவினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்பப் பெறுக - டிடிவி தினகரன்!
பாமகவினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை திரும்பப் பெறவேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அறவழியில் போராட்டம் நடத்திய,


நடிகர்கள் அரசியல்வாதி ஆவதில் தவறு இல்லை: நடிகர் விஷால்

2024-07-22 01:51:11 - 5 days ago

நடிகர்கள் அரசியல்வாதி ஆவதில் தவறு இல்லை: நடிகர் விஷால்
கடலூர்,கடலூரில் நடிகர் விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-சினிமா படங்களில் 2-ம் பாகம் தோல்வியடைவது குறித்து கருத்து கேட்கிறீர்கள். மக்களின் ரசனைக்கு ஏற்றபடி படம் இருந்தால் தான் மக்கள் ரசிப்பார்கள். அந்த படங்கள் தான் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் மட்டும் ஏன்? 2 ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படுகிறது என்று தெரியவில்லை. கடந்த அரசும்,


அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகிய பைடன்.. புது வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு

2024-07-22 01:48:42 - 5 days ago

அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகிய பைடன்.. புது வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவித்தார். துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் களம் காண்கிறார். குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார். துணை அதிபர் வேட்பாளராக ஜேடி வேன்ஸ் அறிவிக்கப்பட்டார்.


சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை.. போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

2024-07-16 11:19:19 - 1 week ago

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை  கொடுத்த 15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை.. போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பினை வழங்கியுள்ளது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தென் நெற்குணம் கிராமத்தில் தாத்தா, பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வந்த ஏழு வயது மற்றும் ஒன்பது வயது சிறுமிகளை கடந்த 2017


குஜராத்தில் இருந்து லண்டனுக்கு பழைய காரில் 2½ மாதம் பயணம் செய்த குடும்பத்தினர்!

2024-07-16 09:44:26 - 1 week ago

குஜராத்தில் இருந்து லண்டனுக்கு பழைய காரில் 2½ மாதம் பயணம் செய்த குடும்பத்தினர்!
குஜராத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பழைய காரில் பயணம் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குஜராத்தை சேர்ந்த தமன் தாக்கூர் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது பழைய காரில் அகமதாபாத்தில் இருந்து கடந்த ஆண்டு லண்டனுக்கு பயணத்தை தொடங்கி உள்ளனர். 1950-ம் ஆண்டுகளில் அறிமுகமான அந்த


நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது

2024-07-16 08:52:54 - 1 week ago

நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது
கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் நிலத்தை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி.அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.


மின்கட்டண உயர்வை வாபஸ் பெறவேண்டும்- ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

2024-07-16 08:00:54 - 1 week ago

மின்கட்டண உயர்வை வாபஸ் பெறவேண்டும்- ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-மாதம் ஒரு முறை மின் கணக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் 1,000 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வரை பயனடையலாம் என்றும் தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகளாகியும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மாறாக,


Follow Me

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.