நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம் தொடர்பாக தென்மண்டல ஐ.ஜி. கண்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-ஜெயக்குமாரின் உடலில் 15 செ.மீ-50 செ.மீ. அளவு கடப்பா கல், கம்பியுடன் கட்டப்பட்டிருந்தது. பாத்திரம் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் பிரஷ் வாயில் இருந்தது. ஜெயக்குமாரை காணவில்லை என 3-ம் தேதி புகார் வந்தது; அன்று இரவு 9 மணிக்கு வழக்கு பதியப்பட்டது. புகார் மனுவுடன் 2 கடிதங்கள் தரப்பட்ட பின் காணவில்லை என்ற வழக்கு சந்தேக மரண வழக்காக மாற்றப்பட்டது.
கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 32 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சைபர் போலீஸ் மற்றும் தடையை வீழ்த்தும் நிபுணர்கள் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஜெயக்குமார் மரணத்தில் பல கேள்விகளுக்கு தெளிவு கிடைக்க வேண்டியுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் இதில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும்.ஜெயக்குமார் மரணம் தொடர்பாக முதற்கட்ட உடற்கூறாய்வு அறிக்கையே வந்துள்ளது; முழு அறிக்கை வரவில்லை. ஜெயக்குமார் மரணம் தற்கொலை என்றோ, கொலை என்றோ முடிவு செய்யவில்லை. மர்ம மரணம் தொடர்பாக அறிவியல் ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. கிடைத்த தடயங்கள் மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் பணம் தொடர்பான பிரச்சினை, அரசியல் பிரச்சினை என பல உள்ளது.
ராமஜெயம் விவகாரத்தில் கொலை என முடிவு செய்தோம்; ஆனால் ஜெயக்குமார் விவகாரத்தில் அப்படி எளிதாக முடிவுக்கு வர முடியவில்லை. ஜெயக்குமார் விவகாரத்தில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம்; ஜெயக்குமார் மரண விவகாரத்தில் தேவைப்பட்டால் சபாநாயகரிடமும் விசாரணை நடத்தப்படும்.
ஜெயக்குமார் மரணம் தொடர்பாக 10 தனிப்படைகள் மூலம் தீவிர புலனாய்வு விசாரணை நடந்து வருகிறது. அனைவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. கூடிய விரைவில் இந்த வழக்கு முடிவு பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?
100-லிருந்து 10-ஐ எத்தனை முறை கழிக்க முடியும்?
தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?
போதைப் பொருள் பயன்பாடு- நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவப் பரிசோதனை
போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை
ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!
கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்
யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!