ராமநாதபுரம் - தேடல் முடிவுகள்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி - ராமநாதபுரம் பகீர் சம்பவம்

2024-04-24 01:23:44 - 2 weeks ago

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி - ராமநாதபுரம் பகீர் சம்பவம் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள கொடுங்குளத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கும் ஆர்த்தி என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கணவரின் நண்பரான இளையராஜாவுடன் ஆர்த்திக்கு தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதையறிந்து ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த், இருவரையும் கண்டித்து எச்சரித்த நிலையில், காதலனுடன்


தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குப்பதிவு

2024-04-19 15:40:29 - 2 weeks ago

தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குப்பதிவு தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டனர்.காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது. அதன்பின்


ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு?

2024-04-11 02:57:32 - 3 weeks ago

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு? தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுள் 35வது தொகுதியான ராமநாதபுரம் தொகுதியில் இராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி (தனி), திருவாடானை, புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் திருச்சுழி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் வரலாறு: ராமநாதபுரம் தொகுதியில் 2008ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பாக


எடப்பாடி பழனிச்சாமியின் பிரதமர் வேட்பாளர் யார்? - டிடிவி தினகரன் கேள்வி

2024-04-09 02:34:18 - 4 weeks ago

எடப்பாடி பழனிச்சாமியின் பிரதமர் வேட்பாளர் யார்? - டிடிவி தினகரன் கேள்வி கோவை ராமநாதபுரம் பகுதியில் அம்மா முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “அண்ணாமலைக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும். அண்ணாமலை நன்கு படித்தவர், சிறந்த உழைப்பாளி, இரவு, பகல் பாராது மக்களுக்காக உழைக்கக் கூடியவர். நேர்மையாளர், கொள்கை


டீக்கடையில் பஜ்ஜி சுட்டு வாக்கு சேகரித்த ஓ.பன்னீர் செல்வம்

2024-04-06 16:16:51 - 1 month ago

டீக்கடையில் பஜ்ஜி சுட்டு வாக்கு சேகரித்த ஓ.பன்னீர் செல்வம் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா கூட்டணியின் சார்பில் சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ராமநாதபுரத்தில் அவரது ஆதரவாளர்களுடன் தங்கி இருந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பட்டிணம்காத்தான் சோதனை சாவடி அருகே தேர்தல் அலுவலகம் அமைத்துள்ளார். தினமும் சட்டமன்ற தொகுதி வாரியாக ஒன்றிய வாரியாக கிராமங்களுக்கு


மோடிதான் என்னை ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுமாறு கூறினார் : ஓ.பன்னீர்செல்வம்

2024-04-04 13:44:01 - 1 month ago

மோடிதான் என்னை ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுமாறு கூறினார் : ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-நான் கூட்டணி சார்பாக தேர்தலில் போட்டியிட பாரதப் பிரதமரிடம் விருப்பம் தெரிவித்த போது ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுங்கள் என்று தெரிவித்தார். எனக்கு போட்டியாக பன்னீர்செல்வம் என பலரை


பலாப்பழத்தை மறக்கடித்த பழக்கதோஷம்.. இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்... ஓ.பி.எஸ்

2024-04-03 05:27:19 - 1 month ago

பலாப்பழத்தை மறக்கடித்த பழக்கதோஷம்.. இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்... ஓ.பி.எஸ் ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. ஆதரவுடன் சுயேட்சையாக களமிறங்கியுள்ள ஓ.பன்னீர்செல்வம் கேட்ட சின்னம் கிடைக்காமல், கிடைத்த பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.ராமேசுவரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு பிரசாரத்தை தொடங்கிய அவர் நேற்று பரமக்குடி பகுதியில் வாக்கு சேகரித்தார். தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே


என் மண் என் மக்கள் யாத்திரையின்போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ : அண்ணாமலை விளக்கம்

2024-03-29 16:45:37 - 1 month ago

என் மண் என் மக்கள் யாத்திரையின்போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ : அண்ணாமலை விளக்கம் நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்ட தொடங்கி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் ஏற்கெனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், கோவையில் தேர்தல் பிரசாரத்தின்போது ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மறைத்து வைத்து


தமிழகத்தில் வேட்பு மனு பரிசீலனை - 569 மனுக்கள் நிராகரிப்பு

2024-03-29 09:02:21 - 1 month ago

தமிழகத்தில் வேட்பு மனு பரிசீலனை - 569 மனுக்கள் நிராகரிப்பு தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து நேற்றைய தினம் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. இந்த தேர்தலில் போட்டியிட தமிழகத்தில் 238 பெண் வேட்பாளர்கள் உள்பட


நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு

2024-03-28 03:13:53 - 1 month ago

நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சிட்டிங் எம்.பி ரவீந்திரநாத் உடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து தேனி பழனிசெட்டிபட்டி அருகே செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், ``தற்போதுள்ள காலகட்டத்தில் ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி ஆகிய தலைவர்கள் களத்தில் வெற்றி பெற்றால்தான், அ.தி.மு.க காப்பாற்றப்படும் என்பதால், இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை.