POLLING FLAMES

 

டீக்கடையில் பஜ்ஜி சுட்டு வாக்கு சேகரித்த ஓ.பன்னீர் செல்வம்

2 years ago 06 ஏப்ரல் 2024 04:16 PM | views : 214
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா கூட்டணியின் சார்பில் சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ராமநாதபுரத்தில் அவரது ஆதரவாளர்களுடன் தங்கி இருந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பட்டிணம்காத்தான் சோதனை சாவடி அருகே தேர்தல் அலுவலகம் அமைத்துள்ளார்.

தினமும் சட்டமன்ற தொகுதி வாரியாக ஒன்றிய வாரியாக கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். இவ்வாறு இன்று பிரசாரத்திற்கு சென்ற ஓ.பன்னீர் செல்வம் ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயலில் உள்ள டீக்கடைக்கு சென்று டீ குடித்தார். அப்போது அந்த கடையில் பஜ்ஜி சுடுவதற்காக பலகார மாஸ்டர் தயார் செய்து கொண்டிருந்தார்.

அவருக்கு உதவுவதற்காக சென்ற ஓ.பன்னீர் செல்வம், ஏற்கனவே தயாராக இருந்த பஜ்ஜி மாவில் வாழைக்காய்களை தோய்த்து எண்ணையில் போட்டு பஜ்ஜி சுட்டார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள், நெடுஞ்சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் கடை முன்பு குவிந்தனர். அவர்களிடம் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்த ஓ.பன்னீர் செல்வம், தான் ஆரம்ப காலத்தில் பெரியகுளத்தில் டீக்கடை நடத்தி வந்ததை குறிப்பிட்டு, பழையதை என்றும் மறக்கவில்லை என்று கூறினார். தனக்கு பலாப்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK MK STALIN எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் TAMIL NADU டிடிவி தினகரன் TTV DHINAKARAN AIADMK ரஜினிகாந்த் ANBUMANI RAMADOSS கனமழை பாராளுமன்ற தேர்தல் இந்திய அணி PMK காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN முக ஸ்டாலின் பாமக தமிழகம் கோவை CONGRESS EDAPPADI PALANISWAMI AJITH PARLIAMENT ELECTION COIMBATORE திருமாவளவன் INDIAN CRICKET TEAM கொலை அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM கைது அமமுக KEERTHY SURESH OPS தமிழ்நாடு NELLAI சட்டசபை தேர்தல் RAJINIKANTH நெல்லை கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் வடகிழக்கு பருவமழை TAMIL ACTRESS THIRUMAVALAVAN தேவர் BIGG BOSS TAMIL தென்காசி சூர்யா அஜித் விடுமுறை கள்ளக்காதல் தீபாவளி திருப்பரங்குன்றம் மதுரை ELECTION COMMISSION CSK தூத்துக்குடி SURIYA கீர்த்தி சுரேஷ் வன்னியர்