ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-நான் கூட்டணி சார்பாக தேர்தலில் போட்டியிட பாரதப் பிரதமரிடம் விருப்பம் தெரிவித்த போது ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுங்கள் என்று தெரிவித்தார்.
எனக்கு போட்டியாக பன்னீர்செல்வம் என பலரை நிறுத்தி உள்ளனர். யார் நிறுத்தி இருக்கிறார்கள் என்பதை நான் எனது வாயால் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, உங்களுக்கே தெரியும்.கச்சத்தீவை 1974-ல் காங்கிரஸ் அரசும், தி.மு.க. அரசும் தாரை வார்த்து இலங்கைக்கு கொடுத்தது. கச்சத்தீவை மீட்க 2011-ல் உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க. சார்பில் வழக்கு தாக்கல் செய்தபோது இங்கு இருக்கும் ஆவணங்கள் அனைத்தும் அங்கு சமர்ப்பிப்பட்டு உள்ளது. கச்சத் தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதி கூறியுள்ளார்.
இந்த பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும். படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க பயிற்சி வகுப்புகள் தொடங் கப்படும். கனிமவளம் பாதிக்காத வகையில் தொழில் வளம் பெருக நடவடிக்கை எடுப்பேன். நானும் ராமநாதபுரத்தை சேர்ந்தவன் தான். பழைய பிரிக்கப்படாத ராமநாதபுரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர்தான் சொந்த ஊர்.அ.தி.மு.க.வில் தற்போது யார் வேட்பாளராக நிற்கிறார்கள் என்றே தெரியவில்லை. அந்த அளவிற்கு கட்சியின் நிலை கீழே சென்று உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
முத்து வீட்டுக்குள்ளே தட்டு பலகை அது என்ன ?
தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?
உங்களுக்கு சொந்தமானத ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்?
ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!
கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்
யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை
கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
பக்ரீத் பண்டிகையையொட்டி ஆட்டுச் சந்தையை மூட மகாராஷ்டிராவில் உத்தரவு
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!