நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்ட தொடங்கி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் ஏற்கெனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், கோவையில் தேர்தல் பிரசாரத்தின்போது ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மறைத்து வைத்து பணம் கொடுப்பதுபோல் வீடியோ வெளியாகி வைரலானது.
இந்த வீடியோவின் உண்மை நிலையை கண்டறிய கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த வீடியோ கடந்த ஆண்டு 'என் மண் என் மக்கள்' யாத்திரையின்போது எடுக்கப்பட்டது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கோவை மாவட்ட கலெக்டரிடம் அனைத்து ஆதாரங்களும் இருப்பதால், அந்த வீடியோவின் நம்பகத்தன்மையை சரிபார்ப்பதற்கு பதிலாக, 29.07.2023 அன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கள் என் மண் என் மக்கள் யாத்திரையின் போது எடுக்கப்பட்ட வீடியோவை பார்க்கவும். பாசத்தின் அடையாளமாக ஆரத்தி எடுப்பவர்களுக்கு வெகுமதி அளிப்பது நமது கலாச்சாரம் ஆகும்.
ஆனால் தேர்தல் நேரத்தில் இதை நாங்கள் கடைப்பிடிப்பதில்லை. மற்றவர்களைப் போல வாக்குகளுக்காக பணத்தில் நம்பிக்கை வைக்க மாட்டோம் என்று நாங்கள் ஏற்கனவே கூறியுள்ளோம்; இன்று பொய்களைப் பரப்பும் கட்சிகள் பணப்பட்டுவாடா செய்யும்போது, கலெக்டர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்."இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார். With all the resources at the disposal of the @CollectorCbe, instead of checking on the authenticity of a video, he decides to respond to something that was shot on 29.07.2023 during our En Mann En Makkal Yatra in the Ramanathapuram District. It's in our culture to reward those… https://t.co/cjWMU2IcV9— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 29, 2024
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?
முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!