POLLING FLAMES

 

அம்மா, அப்பா இல்லை… நீங்கள்தான் எல்லாம்... தயவு செய்து என்னை பாஸ் பண்ணுங்க - வைரலாகும் மாணவரின் பதில் தாள்

1 month ago 25 மார்ச் 2026 12:16 AM | views : 194
ஐதராபாத்,

பெற்றோர் தங்கள் குழந்தைகள் நன்றாக படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்ற ஆசையில் பெரிய கல்லூரிகளில் சேர்த்து, லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்துகின்றனர். ஆனால், சில மாணவர்கள் படிப்பை புறக்கணித்து மொபைல், ரீல்ஸ், சமூக வலைதளங்களில் நேரத்தை செலவழித்து தங்களது எதிர்காலத்தை கெடுத்துகொள்கிறார்கள்.

தேர்வை சரியாக எழுத முடியாத இத்தகைய மாணவர்கள், பல்வேறு வழிகளில் ஆசிரியர்களிடம் பாஸ் செய்ய வேண்டி முயற்சி செய்வதும் வழக்கமாக உள்ளது. சிலர் பதில் தாளில் பணம் வைப்பது போன்ற சம்பவமும் நடக்கின்றது.

இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் சமீபத்தில் முடிந்த இன்டர்மீடியட் தேர்வுகளின் மதிப்பீட்டின்போது அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மதிப்பீட்டாளர்கள் பதில் தாள்களை திருத்தும் போது, ஒரு மாணவர் எழுதியிருந்த வாசகங்கள் அவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அந்த மாணவர், “சார்… எனக்கு அம்மா, அப்பா இல்லை. நீங்கள்தான் எனக்கு எல்லாம். தயவு செய்து என்னை பாஸ் பண்ணுங்கள். நான் படித்தது தேர்வில் வரவில்லை. நீங்கள் தான் என் கடவுள்” என்றும் ஆசிரியரின் காலில் விழுந்து வணங்கும் மாணவர் உருவத்தை வரைந்து, அதற்கு அருகில் ‘சார்’ மற்றும் ‘நான்’ என குறிப்பிட்டிம் இருந்தார். இந்த பதில் தாளின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI BJP அண்ணாமலை பாஜக TVK AMMK ADMK ANNAMALAI எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் MK STALIN ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் PMK TTV DHINAKARAN TAMIL NADU மு.க.ஸ்டாலின் AIADMK பாராளுமன்ற தேர்தல் இந்திய அணி UDHAYANIDHI STALIN காங்கிரஸ் பாமக ரஜினிகாந்த் கோவை முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM CONGRESS கனமழை அன்புமணி ராமதாஸ் தமிழகம் தமிழக வெற்றிக் கழகம் திருமாவளவன் COIMBATORE EDAPPADI PALANISWAMI கொலை KEERTHY SURESH சீமான் தமிழ்நாடு வன்னியர் நெல்லை OPS SURIYA தேவர் PARLIAMENT ELECTION NELLAI பிரதமர் மோடி அமமுக கைது THIRUMAVALAVAN சூர்யா ஓபிஎஸ் TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் தூத்துக்குடி கொரோனா BIGG BOSS TAMIL தமிழக சட்டசபை தேர்தல் AJITH பாலியல் தொல்லை திருப்பரங்குன்றம் மதுரை RAJINIKANTH வடகிழக்கு பருவமழை ELECTION COMMISSION அஜித் நடிகை விடுமுறை அன்புமணி கீர்த்தி சுரேஷ் CSK தென்காசி THOOTHUKUDI கள்ளக்காதல் TAMILAGA VETTRI KAZHAGAM