POLLING FLAMES

 

த.வெ.க. தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்ட கான்வாய் வாகனங்கள் வாபஸ்

1 hour ago 07 மே 2026 12:24 AM | views : 14

சென்னை

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிலான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை இல்லாமல் த.வெ.க. உள்ளது. இதனால், அக்கட்சி ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.


இந்நிலையில், த.வெ.க. அலுவலகத்திற்கு வந்த ஆதவ் அர்ஜுனா மற்றும் செங்கேட்டையன் ஆகியோருடன் விஜய் ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர் பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் இருந்து நீலாங்கரை வீட்டுக்கு விஜய் புறப்பட்டார்.


த.வெ.க. தலைவர் விஜய்க்கு, முதல்-அமைச்சருக்கு வழங்கப்படும் கான்வாய் வாகனங்களுடனான பாதுகாப்பு கடந்த 3 நாட்களாக வழங்கப்பட்டு வந்தது. வாக்கு எண்ணிக்கை நடந்த தினமே அவருக்கு கான்வாய் வாகனங்களுடன் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் இருந்து விஜய் வீட்டுக்கு புறப்படுவதற்கு முன்பே கான்வாய் வாகனங்கள் எடுத்து செல்லப்பட்டன. அவை தலைமை செயலகம் நோக்கி புறப்பட்டு சென்றன. 4 கான்வாய் வாகனங்களும் புறப்பட்ட நிலையில் காவல் துறையினர் மட்டுமே விஜய்யுடன் உள்ளனர்.


த.வெ.க. தலைவர் விஜய்க்கு, முதல்-அமைச்சருக்கு அளிக்கப்படும் சிறப்பு பாதுகாப்பு வளையம் எனப்படும் கான்வாய் வாகனங்கள் வாபஸ் பெறப்பட்டு உள்ளன. இதனால், கான்வாய் வாகனங்கள் எதுவுமின்றி விஜய் நீலாங்கரை வீட்டுக்கு புறப்பட்டார். இதில், தானாக முன்வந்து கான்வாய் வாகனங்களை விஜய் திருப்பி அனுப்பினார் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் இந்திய அணி AIADMK TAMIL NADU PMK பாமக காங்கிரஸ் கனமழை ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் கோவை முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM CONGRESS EDAPPADI PALANISWAMI COIMBATORE PARLIAMENT ELECTION கொலை தமிழகம் அன்புமணி ராமதாஸ் திருமாவளவன் தேவர் OPS தமிழ்நாடு பிரதமர் மோடி சீமான் அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM KEERTHY SURESH வன்னியர் SURIYA ஓபிஎஸ் BIGG BOSS TAMIL THIRUMAVALAVAN சூர்யா கைது கொரோனா சட்டசபை தேர்தல் NELLAI TAMIL ACTRESS நெல்லை தீபாவளி AJITH தமிழக சட்டசபை தேர்தல் விடுமுறை RAJINIKANTH அன்புமணி வடகிழக்கு பருவமழை அஜித் தூத்துக்குடி திருப்பரங்குன்றம் CSK தென்காசி கள்ளக்காதல் ELECTION COMMISSION மதுரை கீர்த்தி சுரேஷ்