மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: உடற்கல்வி ஆசிரியர் மீது ஆசிட் வீச்சு- போலீசார் விசாரணை

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் மீது ஆசிட் வீச்சு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


பள்ளி ஆசிரியர் மீது ஆசிட் வீசிய மர்ம நபர்கள்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெரும்புகலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வாஞ்சிநாதன் (வயது 48). தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியரான இவர், இரவு பணி முடிந்து பைக்கில் வீடு திரும்பியபோது, ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் இவர் முகத்தில் ஆசிட் வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர்.


பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. ஆசிரியர் வாஞ்சிநாதன் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதை வீடியோ எடுத்து தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இந்த பாலியல் தொல்லை காரணமாகவே அவர் மீது ஆசிட் வீசப்பட்டதா என்ற கோணத்தில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel