POLLING FLAMES

 

வி.சி.க. அலுவலகத்தில் போலீசார் குவிப்பு... த.வெ.க. தலைவர் விஜய் வருகை?

51 minutes ago 09 மே 2026 04:17 AM | views : 23

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தான் போட்டியிட போவதாக திருமாவளவன் அறிவித்தார். கடைசி நேரத்தில் தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருந்து பின் வாங்கினார்.

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் திண்டிவனம், காட்டுமன்னார்கோவில் ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றது. தற்போது த.வெ.க. ஆட்சி அமைவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை விஜய் கோரினார். இதைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடன் திருமாவளவன் ஆலோசனை நடத்தினார். இதில் பெரும்பாலான நிர்வாகிகள் விஜய்க்கு ஆதரவு கொடுக்கலாம் என்று குரல் கொடுத்துள்ளனர்.

அதற்கு சில நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் கூட்டணி ஆட்சி என்பது திருமாவளவன் முன்னெடுக்கும் அரசியல் என்பதால், அவரும் விஜய்க்கு ஆதரவு கொடுக்கும் முடிவை எடுத்தார்.

பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிட்டு வென்றுள்ளார். இதில் அவர், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வார் என்று தெரிகிறது. அவர் ராஜினாமா செய்தால், அந்த தொகுதிக்கு 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் வரும்.

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியிட்டு த.வெ.க. கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளின் விருப்பமாக இருக்கிறது. எனவே த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்க இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இதனிடையே, இன்று காலை த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக தெரிவிக்கப்படும் என்று திருமாவளவன் தெரிவித்து இருந்தார். இதனால் இன்று காலை முதல் திருமாவளவன் எந்த மாதிரியான முடிவை அறிவிப்பார் என்று பலரும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.

இதற்கிடையே, சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்திற்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். த.வெ.க. தலைவர் விஜய் வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் த.வெ.க.வுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக TVK ANNAMALAI AMMK ADMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN டிடிவி தினகரன் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS PMK TAMIL NADU மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் AIADMK இந்திய அணி ரஜினிகாந்த் காங்கிரஸ் UDHAYANIDHI STALIN பாமக தமிழகம் தமிழக வெற்றிக் கழகம் INDIAN CRICKET TEAM CONGRESS முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் கனமழை கோவை COIMBATORE திருமாவளவன் EDAPPADI PALANISWAMI கொலை தேவர் தமிழ்நாடு KEERTHY SURESH வன்னியர் PARLIAMENT ELECTION SURIYA அமமுக கைது சீமான் பிரதமர் மோடி OPS THIRUMAVALAVAN தமிழக சட்டசபை தேர்தல் NELLAI TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் நெல்லை ஓபிஎஸ் தூத்துக்குடி கொரோனா BIGG BOSS TAMIL சூர்யா AJITH விடுமுறை பாலியல் தொல்லை THOOTHUKUDI ELECTION COMMISSION வடகிழக்கு பருவமழை அன்புமணி RAJINIKANTH தென்காசி திருப்பரங்குன்றம் கள்ளக்காதல் மதுரை CSK கீர்த்தி சுரேஷ் நடிகை அஜித்