POLLING FLAMES

 

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பது எப்போது?

1 hour ago 09 மே 2026 01:04 PM | views : 39

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக வெற்றி பெற்ற தவெகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்திருக்கும் நிலையில், முதல்வராக விஜய் பதவியேற்பது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.


காரணம், தமிழக ஆளுநர் அர்லேகரை, தவெக தலைவர் விஜய் இன்று மாலை 5 மணிக்கு சந்திக்க நேரம் கேட்டிருந்த நிலையில், அவருக்கு நேரம் ஒதுக்கப்படாமல் இருந்தது. அர்லேகர் இன்று மாலை 7 மணிக்கு கேரளம் புறப்படுகிறார் என்றும் செய்திகள் வெளியாகின. அதற்கேற்ப, ஆளுநரை சந்திக்கப் புறப்பட்ட விஜய், ஆளுநர் மாளிகை செல்லாமல் வீடு திரும்பினார். ஆனால், விஜய் பட்டினப்பாக்கம் வீட்டுக்குள் செல்வதற்கு முன்பே, ஆளுநர் அர்லேகரின் கேரள பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.


தமிழக ஆளுநரிடமிருந்து அழைப்பு வந்ததன்பேரில், மீண்டும் ஆளுநரை சந்திக்க தவெக தலைவர் விஜய் புறப்பட்டுள்ளார்.இந்த சந்திப்பின்போது, கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் சென்று, ஆதரவு கடிதத்தை வழங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.


அவ்வாறு தவெக தலைவர் விஜய், ஆளுநரை சந்தித்து பெரும்பான்மை உறுப்பினர்களின் கடிதத்தை அளித்ததும், அவரை ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பார். சட்டப்பேரவை பதவிக்காலம் மே 10ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், உடனடியாக ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பாரா? நாளையே பதவியேற்பு விழா நடைபெறுமா அல்லது திங்கள்கிழமை பதவியேற்க அழைப்பு விடுக்கப்படுமா என்பது எதிர்பார்ப்பில் உள்ளது.


பெரும்பாலும் திங்கள்கிழமையே தவெக தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் அவர் தனியாக பொறுப்பேற்றுக்கொள்வாரா? அமைச்சரவையும் பொறுப்பேற்றுக் கொள்ளுமா என்பதெல்லாம் நாளை தெரியவரலாம்.


The question has arisen as to when TVK leader Vijay will take oath as the Chief Minister of Tamil Nadu.


தவெகவுக்கு ஆதரவு! ஸ்டாலின் சொன்னது என்ன? திருமா தகவல்!!.


மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI AMMK ADMK TVK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS MK STALIN மு.க.ஸ்டாலின் TAMIL NADU இந்திய அணி PMK AIADMK UDHAYANIDHI STALIN காங்கிரஸ் ரஜினிகாந்த் பாராளுமன்ற தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் தமிழகம் INDIAN CRICKET TEAM கனமழை கோவை பாமக CONGRESS கொலை திருமாவளவன் EDAPPADI PALANISWAMI COIMBATORE முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் தேவர் வன்னியர் SURIYA பிரதமர் மோடி அமமுக கைது OPS NELLAI நெல்லை சீமான் KEERTHY SURESH தமிழ்நாடு சூர்யா THIRUMAVALAVAN BIGG BOSS TAMIL தமிழக சட்டசபை தேர்தல் கொரோனா ஓபிஎஸ் சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS AJITH நடிகை வடகிழக்கு பருவமழை அன்புமணி விடுமுறை அஜித் ELECTION COMMISSION RAJINIKANTH TAMILAGA VETTRI KAZHAGAM கள்ளக்காதல் தூத்துக்குடி பாலியல் தொல்லை திருப்பரங்குன்றம் மதுரை CSK கீர்த்தி சுரேஷ் PARLIAMENT ELECTION தென்காசி